தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மணப்பாறையில் பேரணியில் அதிமுக பிரமுகர் மயங்கி விழுந்து சாவு

கொழுந்தும் வெயிலில் காமராஜர் சிலையில் இடந்து துவங்கிய பேரணி இறுதியாக பெரியார் சிலையை வந்தடைந்தது. இந்த பேரணியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பாசறையைச் சேர்ந்த பலரும் கலந்து

News image
Updated On :7 மார்ச் 2015, 12:07 pm

கிருஷ்ணமூர்த்தி

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அதிமுக சார்பில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட அதிமுக பிரமுகர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

மணப்பாறையில் அதிமுக திருச்சி புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறையின் சார்பில் பாசறை எழுச்சிப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

கொழுந்தும் வெயிலில் காமராஜர் சிலையில் இடந்து துவங்கிய பேரணி இறுதியாக பெரியார் சிலையை வந்தடைந்தது. இந்த பேரணியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பாசறையைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். இதே போல் மணப்பாறை அருகே இளங்காகுறிச்சியைச் சேர்ந்த அதிமுக கிளைக்கழக துணைச் செயலாளர் முகமது முஸ்தபா வயது 55. என்பவரும் கலந்து கொண்டார். பேரணி பேருந்து நிலையம் அருகே சென்ற போது திடீரென முகமது முஸ்தபாவிற்கு மயக்கம் ஏற்படவே உடனே கட்சி நிர்வாகிகள் உடனடியாக அவரை மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்தார். சம்பவம் பற்றி தகவல் அறிந்த மக்களவை துணை தலைவர் மு.தம்பிதுரை, மாநிலங்களவை உறுப்பினர் ரெத்தினவேல், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் இறந்தவரின் உடலை அவரது இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.