நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதிதாக வாங்கிய பைக்கில் கோயிலுக்குச் சென்ற போது விபத்து : தம்பதி பலியான பரிதாபம்

புதிதாக வாங்கிய பைக்கில், கணவனும், மனைவியும் கோயிலுக்குச் சென்று திரும்பியபோது, எதிரே வந்த கார்

News image
Updated On :9 மார்ச் 2015, 6:14 am

என்.​ அங்​கு​பாபு

புதிதாக வாங்கிய பைக்கில், கணவனும், மனைவியும் கோயிலுக்குச் சென்று திரும்பியபோது, எதிரே வந்த கார் மீது மோதிய விபத்தில், தம்பதி இருவரும் பரிதாபமாக பலியாகினர்.

ஒட்டன்சத்திரம் சத்யாநகரை சேர்ந்தவர் கன்னியப்பன் மகன் வீரமணி(25). ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருகிறார்.  இவரது மனைவி மலர்விழி(20).  இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் ஆவர். இந்நிலையில் வீரமணி பழைய மோட்டார் சைக்கிளை விலைக்கு வாங்கி ஞாயிற்றுக்கிழமை மனைவியுடன் பழனிக்கு சென்று விட்டு ஊர் திரும்பியுள்ளார்.  இருவரும் பழனியை அடுத்த விருப்பாட்சி மேடு வீரலப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்யத போது ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனி நோக்கி வந்த காருடன் எதிர்பாரா விதமாக மோதியது. இதில் வீரமணி பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.  மலர்விழி பலத்த காயங்களுடன் ஒட்டன்சத்திரத்துக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதுகுறித்து சத்திரப்பட்டி போலீஸார் காரை ஓட்டி வந்த மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.