நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பழனி மாரியம்மன் கோயில் பால்குட ஊர்வலம், அன்னாபிஷேகம் மற்றும் உற்சவசாந்தி

பழனி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா நிறைவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை 1566 பால்குடங்கள் ஊர்வலம், அன்னாபிஷேகம் மற்றும் உற்சவசாந்தி விழா நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2015, 2:50 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா நிறைவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை 1566 பால்குடங்கள் ஊர்வலம், அன்னாபிஷேகம் மற்றும் உற்சவசாந்தி விழா நடைபெற்றது.

பழனி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் மாசித்திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை உற்சவசாந்தி விழா நடைபெற்றது.  விழாவை முன்னிட்டு 1566 பால்குடங்கள் ஊர்வலம், அன்னாபிஷேகம் ஆகியன நடைபெற்றது. பழனி கடைவீதி பாண்டியவேளாளர் மடம் முன்பு வ.உ.சி. தலைமை மன்றம் சார்பில் துவங்கிய 1566 பால்குடங்கள் ஊர்வலம் நான்குரதவீதியை சுற்றி வந்து அருள்மிகு மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. 

பின்னர் சாயரட்சையின் போது சுயம்புவாக வீற்றிருக்கும் மாரியம்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சோடஷ அபிஷேகம் நடைபெற்றது.  தொடர்ந்து சுத்த அன்னம், பச்சைக்கற்பூரம் கொண்டு அம்மனுக்கு அன்னபூரணி அலங்காரம் செய்யப்பட்டது.  பின் காதம்பரி அலங்காரம் எனப்படும் காய்கறிகள், கனிகள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மனுக்கு சுத்த நெய்யால் தயாரிக்கப்பட்ட லட்டு, முறுக்கு, அப்பம் படைக்கப்பட்டது. அலங்கார பூஜைகளை செல்வசுப்ரமணிய குருக்கள் தலைமையில் ஏராளமானோர் செய்திருந்தனர். அம்மனுக்கு சோடஷ தீபாராதனை, மஹா தீபாராதனை நடைபெற்ற பின் கோயில் முன்பு சிறப்பு சித்ரான்ன அன்னதானம் நடைபெற்றது.

அன்னதான நிகழ்ச்சியை பழனி எம்எல்ஏ., வேணுகோபாலு, சித்தனாதன் சன்ஸ் சிவனேசன் ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி., குமாரசாமி, நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம், சித்தனாதன் சன்ஸ் தனசேகரன், ராகவன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிமுக தொகுதி செயலாளர் மகுடீஸ்வரன், அரசு வழக்கறிஞர் சேனாபதி, சுகந்தவிலாஸ் மகேஷ், தமிழ் இலக்கிய மன்ற செயலர் அனந்தகிருஷ்ணன், கவுன்சிலர்கள் சுந்தர், இந்திரா திருநாவுக்கரசு, மகேஸ்வரி சக்திவேல், முருகபாண்டியன்,  64 ஸ்தானீக மிராஸ் பண்டாரங்கள் கணேசன், வ.உ.சி தலைமையக தலைவர் சிவக்கொழுந்து உள்ளிட்ட ஏராளமனோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.