சிதம்பரம் நகரில் புதன்கிழமை காலை விபத்தில் பேருந்தில் சிக்கி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிதம்பரம் அருகே உள்ள மணலூர் தையாக்குப்பம் மெயின்ரோட்டைச் சேர்ந்த வெங்கட்ராமன் மகன் குணசேகரன் (20). இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக
உடற்கல்வித்துறையில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் புதன்கிழமை பயிற்சி வகுப்பு செல்வதற்காக மணலூரிலிருந்து சிதம்பரம் நகரம்
வழியாக பல்கலைக்கழக மைதானத்திற்கு புறப்பட்டு சென்றார். அப்போது கீழரதவீதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே தனியார் பேருந்தை முந்தும்
போது குறுக்கே வந்த குதிரை மோதியதில் நிலை தடுமாறி மாணவர் குணசேகன் பேருந்தின் பின்புற சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாளவாடி அருகே கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை

கூட்டுறவுத் துறை தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி! மாவட்டத் தோ்தல் அலுவலா் தொடங்கி வைத்தாா்!

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்! - சீமான்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருடன் ராமதாஸ் ஆதரவு வேட்பாளா் அருள் சந்திப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

