நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பழனியருகே காட்டுயானைகளால் தென்னந்தோப்பு சேதம்:  4 மரங்கள் வேருடன் சாய்ப்பு

பழனியை அடுத்த கோம்பைப்பட்டியில் தனியார் தென்னந்தோப்பில் வெள்ளிக்கிழமை இரவு காட்டுயானைகள் அட்டகாசத்தால் நான்கு மரங்கள் வேருடன் சாய்க்கப்பட்டது. 15 மரங்களின்

News image
Updated On :14 மார்ச் 2015, 1:00 pm

என்.​ அங்​கு​பாபு

பழனியை அடுத்த கோம்பைப்பட்டியில் தனியார் தென்னந்தோப்பில் வெள்ளிக்கிழமை இரவு காட்டுயானைகள் அட்டகாசத்தால் நான்கு மரங்கள் வேருடன் சாய்க்கப்பட்டது. 15 மரங்களின் குருத்துக்கள் பிய்த்து எறியப்பட்டது.

பழனியை அடுத்த கொடைக்கானல் மலையடிவார வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்கின்றன. காட்டுமாடு, யானை, சிங்கவால்குரங்கு, மந்தி, மலபார் அணில், சிறுத்தை, புலி, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல விலங்குகளும் தற்போது வனத்துறை எடுத்த கணக்கெடுப்பின்போது அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் காட்டுமாடு மற்றும் யானைகள் அதிகரித்துள்ள நிலையில் இவை உணவுக்காக மலையடிவாரங்களில் உள்ள கிராமப்பகுதிகளுக்கு வரத்துவங்கியுள்ளது.  கொடைக்கானல் மலையடிவார கிராமங்களான வரதமாநதி, கோம்பைப்பட்டி, ஆண்டிபட்டி, சட்டப்பாறை உள்ளிட்ட பல பகுதிகளிலும் தற்போது சமீபத்தில் பெய்த மழையால் நெல், மக்காச்சோளம், கரும்பு ஆகியன அதிக அளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  இதை குறிவைத்து தற்போது காட்டுயானைக் கூட்டம் வருகிறது. 

பாலசமுத்திரம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் நெல்வயலை யானைகள் சேதம் செய்துள்ள நிலையில் வெள்ளிக்கிழமை இரவு ஒட்டன்சத்திரம் வனச்சரகத்துக்கு உட்பட்ட கோம்பைப்பட்டி பெரியதுரையான் கோயில் அருகேயுள்ள நாகராஜ் என்பவர் தோட்டத்தில் புகுந்த இரண்டு காட்டுயானைகள் தோட்டம் முழுவதையும் சூறையாடியுள்ளது.  சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் இருந்த தென்னந்தோப்பில் நான்கு மரங்களை முற்றிலும் முட்டி சாய்த்த யானைகள் 14 தென்னை மரங்களின் குருத்தை முற்றிலும் பிய்த்து விட்டன.  இதனால் 18 தென்னை மரங்கள் காய்க்க வழியின்றி போயுள்ளது.  மேலும் தோப்பு முழுக்க சேதம் செய்துள்ளது. 

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த துரைச்சாமி என்பவர் கூறும்போது, மூன்று வருடமாக மழையின்றி விவசாயம் செய்யாமல் இருந்ததால் யானைகள் வராமல் இருந்தது.  தற்போது விளைச்சல் நன்றாக உள்ள நிலையில் யானைகள் வரத்துவங்கியுள்ளது.  வனத்துறை சார்பில் அகழிகள் வெட்டப்பட்டிருந்தாலும் சமீபத்திய மழையால் அவை மூடப்பட்டு விட்டது.  ஆகவே, யானைகள் முன்புபோல வருவதற்கு எந்த தடையும் இல்லை.  தற்போது கோம்பைப்பட்டி வரை யானைகள் வருகின்றது.  இதனால் கிராமத்தில் இரவு நேரங்களில் வெளியே காற்றுவாங்குவதற்காக கூட யாரும் தூங்குவதில்லை.  எப்போது யானை வருமோ என்ற அச்சத்தில் உள்ளோம்.  ஆகவே வனத்துறையினர் உடனடியாக அகழிகளை மீண்டும் பராமரிப்பதோடு மட்டுமன்றி விளைநிலப்பகுதிகளில் வந்துள்ள யானைகளை மீண்டும் வனப்பகுதிக்கு அனுப்ப ஏற்பாடு செய்யவேண்டும் என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.