நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நிலத்தில் கொட்ட இருந்த ஆசிட் கலந்த ஆயில் பேரல்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு

பழனி அருகே தனியார் தோட்டத்தில் நிலத்தில் கொட்ட இருந்த ஆசிட் கலந்த ஆயில் பேரல்கள் விவசாயிகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து திருப்பி அனுப்பப்பட்டது.

News image
Updated On :16 மார்ச் 2015, 3:25 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி அருகே தனியார் தோட்டத்தில் நிலத்தில் கொட்ட இருந்த ஆசிட் கலந்த ஆயில் பேரல்கள் விவசாயிகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து திருப்பி அனுப்பப்பட்டது.

பழனியை அடுத்த அமரபூண்டி பஞ்சாயத்துக்கு உட்பட்டது வத்தக்கவுண்டன்வலசு.  இங்குள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வானம்பார்த்த பூமியாகும்.  மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செய்யப்படும் இங்கு அதிக அளவு தரிசு நிலங்களே உள்ளது.  இந்த கிராமத்தில் ருக்குமணி என்பவருக்கு நிலம் உள்ளது.  இங்கு அவரது சகோதரர் சிவசிதம்பரம் என்பவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சுமார் 62 பேரல்களை லாரிகளில் மூலமாக கொண்டு வந்து இறக்கி வைத்துள்ளார்.  ஆனால் பேரலில் என்ன உள்ளது என தெரியாத நிலையில் அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. 

இந்நிலையில் அந்த பேரலில் இருந்து சிந்திய திரவத்தால் அப்பகுதியில் இருந்த மண் கருப்பு நிறமாக மாறியதை அப்பகுதி வழியாக சென்ற விவசாயிகள் பார்த்து அச்சமடைந்துள்ளனர்.  இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு அப்பகுதி விவசாயிகள் தெரிவித்த போது யாரும் அதை கண்டுகொள்ளவில்லை.  இந்நிலையில் சம்பந்தப்பட்ட நில உரிமையாளரின் சகோதரர் சிவசிதம்பரம் என்பவர் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு அந்த நிலத்தில் குழிகள் தோண்டியுள்ளார்.  இதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தை சேர்ந்த விவசாயிகள் விசாரித்த போது பேரலில் நறுமண தைலம் எடுத்தது போக மீதியான கசடுஆயில் பேரல்களில் உள்ளதாகவும் அதை நிலத்தில் கொட்டி மூடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  இதனால் அச்சமடைந்த விவசாயிகள் நிலம் மாசடைந்தால் விவசாயம் எதுவும் செய்ய முடியாது என்று வருவாய் அலுவலர் ரமாபிரபாவிடம் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்துக்கு வந்த ஆய்வாளர் பேரலில் இருந்த ஆயிலை சோதனைக்கு அனுப்பியுள்ளார்.  ஆனாலும், மேற்படி பேரல்களை உடனடியாக அப்புறப்படுத்தும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து திங்கள்கிழமை நிலத்தில் இருந்த பேரல்கள் பெரிய லாரியில் ஏற்றி அ்பபுறப்படுத்தப்பட்டது.  இந்த பணியின் போது பேரல்களில் இருந்து ஏதேனும் சிதறினால் விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் லாரி, வீரர்கள் சம்பவ இடத்தில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.  ஆசிட் கலந்த ஆயில் பேரல்களை மீண்டும் அனுப்பிய தொழிற்சாலைக்குதான் அனுப்ப வேண்டும் என்று ஆயக்குடி போலீஸார் சிதம்பரத்திடம் எழுதி வாங்கிக் கொண்டனர். 

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தெரிவித்ததாவது, இரண்டு மாதமாக ஆசிட் கலந்த பேரல்களை வருவாய்துறை அதிகாரிகளோ, போலீஸாரோ அப்புறப்படுத்த முன்வரவில்லை.  அதில் இருந்து வெளியான ஆசிட் பட்ட நிலம் கருப்பாகவுமே நாங்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த பின்னரே பேரல்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் முன்வந்தனர். இந்த பகுதியில் சிறிது நேரம் நின்றாலே பேரலில் இருந்து வரும் மணத்தால் கண்எரிச்சல், தலைசுற்றல் ஏற்படுகிறது. பேரலில் சாதாரண கசடு ஆயில்தான் என்றால் எதற்காக முன்னெச்சரிக்கையாக தீயணைப்பு லாரிகளை கொண்டு வந்து வைத்துள்ளனர்.    இவற்றை இங்கு கொண்டு வந்து மறைத்து வைத்தவர்கள் மீது நடவடிக்கைகள் ஏன் எடுக்கவில்லை என்றனர்.   எனினும் ஒருவழியாக அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்திய ஆசிட் கலந்த ஆயில்பேரல்கள் அப்புறப்படுத்திய அளவில் நிம்மதி ஏற்பட்டுள்ளது என கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.