நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பழனியில் அரசு பேருந்து ஜப்தி

பழனியில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

News image
Updated On :19 மார்ச் 2015, 12:14 pm

என்.​ அங்​கு​பாபு

பழனியில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

பழனி லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் சுப்பாரெட்டி.  இவர் கடந்த 2002ம் வருடம் பழனி-திண்டுக்கல் சாலையில் திருநகர் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த போது அரசுப் பேருந்து மோதியதில் தலையில் பலத்த காயமடைந்தார்.  இதைத் தொடர்ந்து அதே ஆண்டு பழனி சார்பு நீதிமன்றத்தில்  இழப்பீடு கோரி வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதி 71, 700 ரூபாய் இழப்பீடு வழங்குமாறு போக்குவரத்துத் துறைக்கு உத்திரவிட்டார்.  ஆனால் நீண்ட ஆண்டுகளாக பணம் வழங்கப்படவில்லை.  இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு அசல் தொகை, வட்டியுடன் ரூபாய் 1,06,327 வழங்குமாறு மீண்டும் போக்குவரத்து நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்திரவு பிறப்பித்தது. 

இதுகுறித்து வாதி தரப்பில் நிறைவேற்றுதல் மனு தாக்கப்பட்டதால் பழனி சார்பு நீதிமன்ற நீதிபதி உத்திரவின் பேரில் வியாழக்கிழமை பழனி பேருந்து நிலையத்தில் பழனியில் இருந்து நெய்க்காரபட்டி செல்லும் அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டு நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.