செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

விருதுநகர்: அரசு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்

விருதுநகர் பகுதியில் சில்லரை தட்டுப்பாடு காரணமாக அரசு பேருந்துகளில் அரசு உத்தரவிற்கு மாறாக

Updated On :19 மார்ச் 2015, 8:07 pm IST

விருதுநகர் பகுதியில் சில்லரை தட்டுப்பாடு காரணமாக அரசு பேருந்துகளில் அரசு உத்தரவிற்கு மாறாக கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சு.முத்துராஜ் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை மார்க்கமாக செல்லும் அரசு நகர பேருந்துகளில் ரூ.9-க்கு பதிலாக ரூ.10 வசூல் செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். எனவே கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து நடத்துனரிடம் கேட்டால் சில்லரை தட்டுப்பாடு பிரச்னையின் காரணமாக ரூ.10 வசூலிப்பதாக கூறுகின்றனர்.

    தமிழ்நாடு அரசு பேருந்துகளின் கட்டணத்தை அரசுதான் நிர்ணயம் செய்ய வேண்டும். அதற்கு மாறாக அரசு போக்குவரத்து நிர்வாகமும், நடத்துனரும் கட்டணத்தை மாற்றியமைப்பதற்கு உரிமையில்லை.

    அரசு போக்குவரத்து நிர்வாகம் அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் செல்லும் நகர பேருந்துகளில் நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதில் பிரச்னை வந்தால் பின்வாங்குவதும், வராவிட்டால் கூடுதல் கட்டணம் வசூல் செய்வது என்ற திட்டத்துடன் செயல்பட்டு வருகிறது.

இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவி்த்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து வருகிறது. அரசு உத்தரவிற்கு மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.