மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

விராலிமலையில் பிட்பாக்கெட் அடித்த மூன்று பேரை விரட்டி பிடித்து போலிஸிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சோதனைச்சாவடி அருகே செவ்வாய்க்கிழமை தொழிலாளியிடம் பிட்பாக்கெட் அடித்த மூன்று பேரை பொதுமக்கள் விரட்டி பிடித்து விராலிமலை

News image
Updated On :5 மே 2015, 1:56 pm

சி. உதயகுமார்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சோதனைச்சாவடி அருகே செவ்வாய்க்கிழமை தொழிலாளியிடம் பிட்பாக்கெட் அடித்த மூன்று பேரை பொதுமக்கள் விரட்டி பிடித்து விராலிமலை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விராலிமலை அருகே உள்ள அத்திப்பள்ளத்தைச் சேர்ந்த அ. குமரவேல்(29) தனியார் தொழிற்சாலை ஊழியர், இவர் தனது நண்பர் செல்வம்(40) என்பவருடன் விராலிமலை சோதனைச்சாவடி அருகே பேருந்துக்கு காத்துகொண்டிருந்தார்.

அப்போது அவர் அருகே வந்த மூன்று பேர் அவரிடம் பேச்சு கொடுத்துக்கொண்டு சட்டைபையில் இருந்த ரூ. 500 -ஐ பிட்பாக்கெட் அடித்துவிட்டு தப்பியோட முயன்றுள்ளனர். சுதாரித்து கொண்ட  குமரவேல் கூச்சலிட்டுள்ளார், உடனடியாக பொதுமக்கள் பிட்பாக்கெட் திருடர்கள் மூன்று பேரையும் விரட்டி சென்று பிடித்து விராலிமலை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து விராலிமலை உதவிகாவல் ஆய்வாளர் ந. புகழேந்தி  விசாரணை மேற்கொண்டதில், வேதாரண்யம் அருகே உள்ள கத்திரிபுலம் த. ரவி(38) திருச்சி துறையூர் கு. முத்து(32) முசிறி பெ. அன்பு(27) என்பது தெரியவந்தது. இதையடுத்து மூன்றுபேரையும் கைது செய்து, மேல்விசாரணை நடத்தி வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.