இரண்டு பெண்களிடம் 14 பவுன் நகை பறிப்பு

திருச்சி உறையூர் அருகே இரண்டு பெண்களிடம் 14 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸôர் தேடி வருகின்றனர்.
Updated on
1 min read

திருச்சி உறையூர் அருகே இரண்டு பெண்களிடம் 14 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸôர் தேடி வருகின்றனர்.

உறையூர் ராமலிங்க நகர் மேற்கு விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி ஆனந்தி (42), பக்கத்து வீட்டை சேர்ந்த பழனியப்பன் மனைவி விசாலாட்சி (60). வெள்ளிக்கிழமை இரவு இவர்கள் இருவரும் வீட்டு வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்தனராம். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் இருவர் முகவரி கேட்பது போல அவர்களிடம் பேசியுள்ளனர்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த இளைஞர் ஆனந்தி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் சங்கிலியையும், விசாலாட்சி அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியையும் பறித்து சென்றனர். இருவரும் கூச்சலிடவே அந்த நபர்கள் தப்பினர்.
இதுகுறித்து உறையூர் போலீஸôர் விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com