திருச்சி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 3.39 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இலங்கை,கொழும்புவில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த ஸ்ரீலங்கன் விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்தனர். அப்போது ஒருவர் தான் கொண்டு வந்த பேக்கில் சப்தம் ஒலித்தது.
இதையடுத்து அதிகாரிகள் அந்த நபரை தனியாக அழைத்துச் சென்று பேக்கை சோதனையிட்டதில் அதில் மைக்ரோ ஓவன் இருந்தது. அதனை பிரித்து பார்த்த போது உள்ளே 3.39 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.84.60 லட்சமாகும்.
தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் கேரளம் மாநிலம், கண்ணூர் அருகேயுள்ள சித்தனிர், பரம்ப,லட்சம் வீடு பகுதியைச் சேர்ந்த மாயன் வாசயில் மகன் ராய்ஸ் (28) என்பதும், இவர் துபையிலிருந்து கொழும்பு சென்று அங்கிருந்து திருச்சி வந்த போது சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் ராய்ஸிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வளைகுடா நாடுகளில் இருந்து 8.15 லட்சம் பேர் இந்தியா வந்துள்ளனர்! - மத்திய அரசு அறிவிப்பு!

காங்கிரஸ் கட்சி ஸ்டாலின் பக்கம்தான் இருக்கிறது! - கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது? தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
வீடியோக்கள்

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

