மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை: அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில்  2000 பேர் மொட்டை அடித்து வழிபாடு

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான செல்வி ஜெ. ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து கர்நாடக உயர்நீதி மன்றம் விடுதலை செய்யப்பட்டதின் தொடர் நிகழ்வாக

News image
Updated On :17 மே 2015, 9:41 am

சி. உதயகுமார்

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான செல்வி ஜெ. ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து கர்நாடக உயர்நீதி மன்றம் விடுதலை செய்யப்பட்டதின் தொடர் நிகழ்வாக அதிமுகவினர் 2000 பேர் ஞாயிற்றுக்கிழமை விராலிமலை சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் மொட்டை அடித்து, 1008 தேங்காய் உடைத்தும் வழிபாடு நடத்தினர்.

விராலிமலை அருள்மிகு சுப்பிரமணியர் சுவாமி மலைக்கோயிலில் நடைபெற்ற இந்த வழிபாட்டுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் புதுக்கோட்டை மாவட்ட செயலருமான  சி. விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். இதில் விராலிமலை சட்டப்பேரவை தொகுதியைச் சேர்ந்த 2000 பேர் மொட்டை அடித்தனர். பின்னர் ஜெயலலிதா வாழ்த்து கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியாக மலைக்கோயிலை சுற்றி வந்து கோயில் படிகளில் 1008 தேங்காய் உடைத்து படிபூஜை வழிபாடு செய்தனர். பின்னர்  மலைக்கோயில் மேலே உள்ள சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆரானைகள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.

இதில் முன்னாள் அமைச்சர் ராதகிருஷ்ணன், விராலிமலை ஒன்றியக்குழு தலைவர் எம், சுப்பையா, ஆத்மா குழுத்தலைவர் எஸ். பழனியாண்டி, பி. சாம்பசிவம், வி. ராமசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் ஆ. பெரியசாமி, ரெ. கிருஷ்ணன், மணிமாலா செந்தில், நகரச்செயலாளர் எஸ். செந்தில், கூட்டுறவுசங்கத்தலைவர் வி. முருகேசன், இயக்குநர் ஜெ. ஆர். அய்யப்பன், பெ. சரவணன், எம். முரளி, எம். மதிவாணன், சி. மணிக்குமார்   உள்ளிட்ட அதிமுகவினர் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்த வழிபாட்டில் பங்கேற்ற அதிமுகவினர் பலர் இரட்டை விரலை காட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் அன்னதானம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.