கூரியர் பார்சல் சர்வீஸ் வேன் மோதி வாலிபர் சாவு
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே செவ்வாய்க்கிழமை கூரியர் பார்சல் சர்வீஸ் வேன் மோதிய விபத்தில் சுமை ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார்.


புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே செவ்வாய்க்கிழமை கூரியர் பார்சல் சர்வீஸ் வேன் மோதிய விபத்தில் சுமை ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் தாதக்குளத்தை சேர்ந்த குமரையா மகன் முருகன்(32) சுமை ஆட்டோ ஓட்டுநர். இவர் முதுகுளத்தூரில் இருந்து வேலூருக்கு வீட்டு உபயோக பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருக்கும் வழியில், விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் சேனியபட்டி பிரிவு சாலை அருகே சுமை ஆட்டோவை நிறுத்தி விட்டு சாலையை கடக்க முற்பட்டுள்ளார் அப்போது மதுரையில் இருந்து கூரியர் பார்சலை ஏற்றி வந்த வேன் எதிர்பாராதவிதமாக முருகன் மீது மோதியுள்ளது.
இதில் காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை காவல் ஆய்வாளர் அ. மா. செந்தில் மாறன் வழக்கு பதிந்து பார்சல் வேன் ஓட்டுநர் திருவண்ணாமலையைச் சேர்ந்த பாட்ஷாவை(31) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...