அரியலூர் அருகே பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.
செந்துறை அருகேயுள்ள அகரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி செல்லம் (38). இவர்களுக்கு இரண்டு மகள்களும்,ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த செல்லம், அரியலூரில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்கப்பட்டார். அங்கும் மருத்துவர்கள் பரிசோதித்த போது பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிய வந்தது. பின்னர் செல்லம் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
பன்றி காய்ச்சலுக்கு பெண் பலியாகியது அப்பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சரவணவேல்ராஜ் உத்தரவின் பேரில் அகரம் பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வளைகுடா நாடுகளில் இருந்து 8.15 லட்சம் பேர் இந்தியா வந்துள்ளனர்! - மத்திய அரசு அறிவிப்பு!

காங்கிரஸ் கட்சி ஸ்டாலின் பக்கம்தான் இருக்கிறது! - கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது? தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
வீடியோக்கள்

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

