அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சிவகாசியில் 14 வயது சிறுமி மானபங்கம்: முடி திருத்தம் செய்யும் தொழிலாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் 14 வயது சிறுமியை மானபங்கம் செய்த வழக்கில், முடி திருத்தம் செய்யும் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

News image
Updated On :21 நவம்பர் 2015, 2:12 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் 14 வயது சிறுமியை மானபங்கம் செய்த வழக்கில், முடி திருத்தம் செய்யும் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

சிவகாசி மேற்கு, ரிசர்வ் லயன், நேருஜி நகரில் குடியிருந்து வருபவர் கயல்நிஷா (44). இவர் வெள்ளையாபுரத்தில் உள்ள அட்டை மில்லில் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் மைதீன் மனைவியைப் பிரிந்து நெல்லையில் தேநீர் கடையில் வேலை செய்து வருகிறார். இவர்களின் 14 வயது மகள் 5-ம் வகுப்பு வரை படித்துவிட்டு உடல் நலக் குறைவு காரணமாக வீட்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் பக்கத்து வீட்டில் ராமர் (48) என்பவர் குடியிருந்து வருகிறார். இவர் சிவகாசி தேவர் தெருவில் முடிதிருத்தம் செய்யும் கடை வைத்துள்ளார். கயல்நிஷா வீட்டிற்கு அடிக்கடி ராமர் வந்து சென்றுள்ளார். மேலும் கயல்நிஷாவின் 14 வயது மகள் தொலைக்காட்சி பார்ப்பதற்காக ராமர் வீட்டிற்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில் 15.9.2012-ம் தேதி பகலில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராமர் வீட்டிற்கு சிறுமி வந்துள்ளார். அப்போது ராமர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது குறித்து சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ராமரைக் கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி என்.ராஜலட்சுமி,

ராமருக்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்கு (இ.த.ச.376) 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார். இளஞ்சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 2012 பிரிவு 3 மற்றும் 4-ன் கீழான குற்றத்திற்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்புக் கூறினார். அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். அபராதத் தொகை ரூ.30 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மேல்முறையீடு காலத்திற்குப் பின்னரோ அல்லது மேல்முறையீடு முடிவடைந்த பின்னரோ தகுந்த ஆவணங்களின் நஷ்டஈடாக அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.