திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டப்படிப்பு சேர்க்கை ஆரம்பம்

சாத்தூரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பாராதியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தப்படும் இளங்கலை பட்டப்படிப்புக்கான சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.

Updated On :7 அக்டோபர் 2015, 3:04 pm

சாத்தூரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பாராதியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தப்படும் இளங்கலை பட்டப்படிப்புக்கான சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.

இது குறித்து மண்டல இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்த நிலையத்தில் இளங்கலை பட்டப்படிப்புக்கான (பி.காம்) சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில், சேர குறைந்த பட்ச கல்வித் தகுதியாக பிளஸ்2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சி நிலையத்தில் விண்ணப்பம் பெறுவதற்கும், பயிற்சியில் சேருவதற்கும் வருகிற 12-ம் தேதி கடைசி நாளாகும். 

இதேபோல், தனியார், அரசு மற்றும் அரசு துறைசார்ந்த அலுவலர்களும் வார இறுதி நாள்களில்(சனி, ஞாயிறு) நடைபெறும் பட்டப்படிப்புக்கான பயிற்சியில் சேர்ந்து பயனடையலாம். எனவே உடனடிச் சேர்க்கைக்கு அசல் கல்விச் சான்றிதழ்களுடன் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயனடையலாம்.
 
மேலும், இது தொடர்பான விவரங்களுக்கு முதல்வர், தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையம், அரசு போக்குவரத்துக் கழகம் எதிரில், சிவசக்தி அரங்கம், எஸ்.ஆர்.நாயுடு நகர், சாத்தூர் என்ற முகவரியிலோ அல்லது 04562-260293, 94860-45666 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.