தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

என்.எல்.சி விவகாரம்: விரைவில் சுமூக தீர்வு எட்டப்படுமென தொழிற்சங்க நிர்வாகிகள் நம்பிக்கை

நெய்வேலி என்.எல்.சி. தொழிலாளர்கள் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம்  தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு தொ.மு.ச., அண்ணா தொழிலாளர்

News image
Updated On :7 செப்டம்பர் 2015, 9:17 am

சீனிவாசன்

நெய்வேலி என்.எல்.சி. தொழிலாளர்கள் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம்  தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு தொ.மு.ச., அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க நிர்வாகிகளுக்கு என்.எல்.சி. நிர்வாகம் சமீபத்தில் அழைப்பு விடுத்தது. அதனை தொழிற்சங்க நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டனர்

அதன் பேரில் இன்று (7–ந் தேதி) நெய்வேலி 1–வது வட்டத்தில் உள்ள நெய்வேலி இல்லத்தில் என்.எல்.சி. நிர்வாகத்தினர் – தொழிற்சங்க நிர்வாகிகள்  இடையே பேச்சுவார்த்தை நடத்தினர். 

சுமார் ஒரு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:- அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில்  தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

எனினும் முடிவு எட்டப்படவில்லை. விரைவில் முடிவு எட்டப்படுமென நம்புகிறோம். மீண்டும் நிர்வாகம் அழைக்கும் போது பேச்சு வார்த்தையில் கலந்து கொள்வோம்.

விரைவில் சுமூகமான முடிவு எட்டப்படும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.