பாம்பு கடித்து பள்ளி மாணவர் மேல்சிகிச்சைக்கு அனுமதி
திண்டிவனம் அடுத்த சிங்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாம்பு கடித்த பள்ளி மாணவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார்.


திண்டிவனம் அடுத்த சிங்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாம்பு கடித்த பள்ளி மாணவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
ஜக்காம்பேட்டை பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் உதயகுமார்(15).இவர் சிங்கனூர் அரசு மேலிநிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் திங்கள்கிழமை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார்.அவரது வகுப்பறையில் இருந்த கட்டுவிரியன் பாம்பு ஒன்று உதயகுமாரை கடித்தது.இதில் மயங்கி கீழே விழுந்த அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இது குறித்து மயிலம் போலீஸôர் வழக்கு பதிந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...