பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

கோவாவில் அதிர்ச்சி: திருமண இணையதளம் மூலம் அறிமுகமான நபரைச் சந்திக்க சென்ற பெண் பலாத்காரம்

திருமண இணையதளம் மூலமாக அறிமுகமான நபரைச் சந்திக்கச் சென்ற பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On :

திருமண இணையதளம் மூலமாக அறிமுகமான நபரைச் சந்திக்கச் சென்ற பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டீஸ்கரைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமண இணையதளம் மூலமாக பெர்னாண்டஸ் என்ற நபருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

இந்நிலையில், தன்னை சந்திக்க கோவா வரும்படி அப்பெண்ணை அழைத்துள்ளார் வெலன்டினோ பெர்னாண்டஸ். அழைப்பை ஏற்று கோவா சென்றுள்ளார். அங்கு அப்பெண்ணை பலாத்காரம் செய்த பெர்னாண்டஸ், அவரிடமிருந்த பணம், ஆபரணங்கள் முதலியவற்றை திருடியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கோவா போலீசில் புகார் அளித்துள்ளார். அப்புகாரில் பெர்னாண்டஸ் பலாத்காரம் செய்து, தன் உடைமைகளைத் திருடி விட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதோடு, இது குறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக பெர்னாண்டஸும், அவரது தாயாரும் தன்னை மிரட்டியதாகவும் அப்பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கோவா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.