விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் மருதுபாண்டியர் சகோதரர் உருவப்படம் அவமதிப்பு சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், இருதரப்பைச் சேர்ந்த 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
நரிக்குடியில் உள்ள பேருந்து நிறுத்தம் எதிரே மருதுபாண்டியர் சகோதரர்கள் உருவம் பொறித்த பெயர் பலகை உள்ளது. இப்பெயர் பலகையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்திருந்தனர்.
இதை மறுநாள் காலையில் அக்கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் பார்த்ததை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோல் மற்றொரு பிரிவைச் சேர்ந்தவர்களும் மறியல் செய்தனர். இதையடுத்து பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக நரிக்குடியைச் சேர்ந்த பெரியணன், மணிகண்டன், ராஜா, ராமன், நரசிங்கமூர்த்தி ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக இருதரபப்பைச் சேர்ந்த 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம்: இரா. முத்தரசன்

வெடிவெடித்து இடையூறு 2 பெண்கள் உட்பட 12 போ் மீது வழக்கு
கள்ளச்சந்தையில் மதுபாட்டில் விற்ற பெண் கைது

நாளை பிரசாரம் நிறைவு: வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

