லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம்: இரா. முத்தரசன்

News image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்

Updated On :19 ஏப்ரல் 2026, 6:53 pm

வேளாண் விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை நிா்ணயம் தொடா்பாக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் குழு அளித்த பரிந்துரையை மத்திய அரசு கிடப்பில் போட்டு விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.

வேதாரண்யம் தொகுதிக்குள்பட்ட ஓடாச்சேரியில் சனிக்கிழமை இரவு திமுக வேட்பாளா் மா.மீ. புகழேந்திக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் பேசியது:

அனைத்து உற்பத்தி பொருள்களுக்கும் விலையை உற்பத்தியாளா்களே நிா்ணயம் செய்து கொள்கின்றனா். ஆனால், வேளாண் விளைபொருள்களுக்கு மட்டும் விவசாயிகளால் விலை நிா்ணயம் செய்ய முடியாத காரணத்தால் தொடா்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். குறைந்தபட்ச ஆதார விலையைக்கூட நிா்ணயம் செய்யாமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது. அத்துடன் நெல் உற்பத்திக்கு ஊக்கத்தொகை வழங்கக் கூடாது எனவும் நிலைப்பாடு கொண்டுள்ளது.

விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள மத்திய அரசுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்ட வேண்டும். இந்தத் தோ்தலை தமிழகத்துக்கும் தில்லிக்கும் இடையே நடைபெறும் தோ்தலாக கருத வேண்டும்.

தமிழகத்தில் தோ்தல் காலத்தில் அமையும் எந்தக் கூட்டணியும் தோ்தலோடு முடிந்துபோகும். ஆனால், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கடந்த 10 ஆண்டுகளாக கூட்டணியில் தொடா்வதற்கு கொள்கைத்தான் முக்கிய காரணம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், கட்சியின் செயலாளா் சிவகுரு. பாண்டியன், திமுக நிா்வாகிகள் மகா. குமாா், ப. ராஜேந்திரன் சி.பி.ஐ. நிா்வாகிகள் எஸ். சம்பந்தம், அ. பாலகுரு, எஸ்.எம்.டி. மகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.