விருதுநகர் அரசு மருத்துவமனையில் குழந்தைகளை பராமரிக்க தேவையான அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தனர்.
அரசு தலைமை மருத்துவமனையில் அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் வழங்கும் விழாவிற்கு ஆட்சியர் வே.ராஜாராமன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துக்குமரன் முன்னிலை வகித்தார்.
இதில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், தனியார் மருத்துவமனைகளில் பிறக்கின்ற குழந்தைகளுக்கு அனைத்தும் கிடைத்து விடுகிறது. அதேபோல், அரசு மருத்துவமனைகளில் பிறக்கிற குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், முதல்வரின் கருணை உள்ளத்தில் தோன்றிய திட்டம் தான் அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் வழங்கும் தி்ட்டமாகும். இந்த அம்மா குழந்தைகள் பரிசு பெட்டகத்தில் குழந்தைகளை பாதுகாக்கவும், பராமரிக்கவும் தேவையான 16 வகையான பொருள்கள் உள்ளன.
இம்மாவட்டத்தில் கன்னிசேரிபுதூர், கல்லமநாயக்கன்பட்டி, ம.புதுப்பட்டி, ஜமீன்கொல்லாங்கொண்டான், ரா.ரெட்டியபட்டி, குன்னூர் ஆகிய சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதேபோல், அழகாபுரி, செங்குன்றாபுரம், எரிச்சநத்தம், வடமலாபுரம், ஆலமரத்துப்பட்டி, சித்துராஜபுரம், விஸ்வநத்தம், கிருஷ்ணபேரி, செவல்பட்டி, தளவாய்புரம் மற்றும் வன்னியம்பட்டி ஆகிய பகுதிகளில் புதிய சுகாதார நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
செய்தி மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தலைமைச்செயலகத்தில் கடந்த 9ம் தேதி அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ரூ.1000 மதிப்பிலான அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். அதேபோல், நிகழாண்டில் ரூ.67 கோடியில் வழங்கப்படவுள்ளது. இதில், குழந்தைகள் பராமரிக்க தேவையான துண்டு, குழந்தைகள் உடை, படுக்கை, கொசுவலை, நாப்கின், எண்ணைய் டப்பா, சோப்புடன் கூடிய சோப்பு டப்பா, ஷாம்பூ, நகவெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை, கைகழுவும் திரவம், பிரசவித்த தாய்க்கான சோப்பு, சௌபாக்கிய கண்டியலேகியம், பச்சிளம் குழந்தைகள் பராமரிக்க தேவையான பொருள்கள் வைத்துக் கொள்ள ஒரு பெட்டகம் என 16 பொருள்கள் உள்ளன. மேலும், இம்மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவி திட்டத்தில் 76577 தாய்மார்களுக்கு ரூ.62.33 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதில், மக்களவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் எஸ்.ஜி.சுப்பிரமணியன், நகராட்சி தலைவர் மா.சாந்தி, ஒன்றியக்குழு தலைவர்கள் கி.கலாநிதி(விருதுநகர்), வேலாயுதம்(சாத்தூர்), யோகவாசுதேவன்(அருப்புக்கோட்டை), மருத்துவத்துறை இணை இயக்குநர் தங்கசாமி, சுகாதாரத்துறை துணை இயக்குநர் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நினைவு நாள்: காஷ்மீரில் சுற்றுலா தலங்களில் பலத்த பாதுகாப்பு!

சட்டப்பேரவை தோ்தல்: வேலூா் மண்டலத்தில் 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியது திமுக அரசு: கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளா்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

