இந்தியாவிற்கு எதிராக ஒரு மறைமுகப் பயங்கரவாத போரை நடத்தி வருகிறது பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்
எல்லையில் மீண்டும் பாகிஸ்தானின் அத்துமீறல்கள் தொடர்ந்து வருவதோடு பாக்கிஸ்தான் இந்தியாவிற்கு எதிரான ஒரு மறைமுகப் பயங்கரவாத போரை நடத்தி வருகிறது என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

எல்லையில் மீண்டும் பாகிஸ்தானின் அத்துமீறல்கள் தொடர்ந்து வருவதோடு பாக்கிஸ்தான் இந்தியாவிற்கு எதிரான ஒரு மறைமுகப் பயங்கரவாத போரை நடத்தி வருகிறது என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். தில்லியில் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான இந்திய எல்லைகள் மிகவும் பதட்டமானவை. போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் தொடர்ந்து மீறி வருகிறது. இதற்கு தக்க பதிலடியை இந்தியா கொடுத்து வருகிறது. மோடி தலைமையிலான அரசு எல்லையில் ஊடுருவ நினைப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. ]
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2014ம் ஆண்டு பதவியேற்றதில் இருந்து ஊடுருவலகள் குறைந்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டும் 277 பயங்கரவாதிகளும், 2012ம் ஆண்டும் 264 பயங்கரவாதிகளும் எல்லையில் ஊடுருவியுள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு 52 பயங்கரவாதிகள் மட்டுமே ஊடுருவ முயன்றுள்ளனர். இந்தியாவில் தேசிய விரோத போக்குகள் குறைந்துள்ளன. நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவுடனான எல்லைப்பிரச்சினை நீடித்து வருகிறது. இதை தீர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேபாள் பூட்டான் எல்லைகளில் எந்த பிரச்னையும் இன்றி அமைதியான போக்கு நிலவுகிறது. இந்தியாவில் காலூன்ற நினைக்கும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் முயற்சி தோல்வியிலே முடியும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

