9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

ஐ.நா. பாதுகாப்பு சபையை சீரமைத்து விரிவுபடுத்த வேண்டியது அவசியம்: பிரதமர் மோடி

ஜி.4 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார். இந்த ஜி4 உச்சி மாநாட்டில் ஜெர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, மற்றும் பிரேசில் அதிபர் தில்மா ரூசெப் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

Published On :

ஜி.4 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார். இந்த ஜி4 உச்சி மாநாட்டில் ஜெர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, மற்றும் பிரேசில் அதிபர் தில்மா ரூசெப் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

அனைத்து ஜி 4 நாடுகளும், ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராவதற்கு ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்குள் ஆதரவை தெரிவித்துக் கொண்டன. தற்போது  ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளாக  சீனா, பிரான்ஸ், ரஷ்யா, ஐக்கிய ராஜ்யம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக ஜி 4 நாடுகளின் கூட்டம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 பிரதமர் நரேந்திர மோடி, நேற்று இக்கூட்டத்தில் பேசும்.. நாம் செல்ல வேண்டிய திசையை தீர்மானிக்க இங்கு கூடியுள்ளோம் தற்போதைய உலக நிஜங்களுக்கு பொருத்தமான வகையிலும், நம்பிக்கையை உருவாக்குகிற வகையிலும், ஐ.நா. பாதுகாப்பு சபையை சீரமைத்து விரிவுபடுத்த வேண்டியது அவசியம் என்று கூறினார். மேலும்

பருவநிலை மாற்றம், நிலைக்கத்தக்க வளர்ச்சி ஆகியவை உலகளாவிய சவால்களாக உருவெடுத்துள்ளன. இவற்றுக்கு தீர்வு காண்பது அனைத்து நாடுகளின் கூட்டு பொறுப்பாகும். ஏனென்றால், எந்த நாடும் எவ்வகையான அச்சுறுத்தலில் இருந்தும் தப்ப முடியாது.பருவநிலை மாற்றத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நாட்டுக்கும் வெவ்வேறு வகையான பொறுப்புகள் உள்ளன. அதன்படி, தொழில்நுட்பங்கள், புதுமைகள், நிதி ஆகியவற்றை எந்த சுயநலமும் இல்லாமல் வளரும் நாடுகளுடன் வளர்ந்த நாடுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

உலகம் முழுவதும் 130 கோடி மக்கள் வறுமையில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வறுமையை அகற்றாவிட்டால், உலக அமைதியோ, நிலைக்கத்தக்க வளர்ச்சியோ சாத்தியம் இல்லை. வறுமையை ஒழிக்க ஏழைகளுக்கு அதிகாரம் அளித்து வருகிறோம். அதற்காக, ஏழைகளுக்கு 18 கோடி வங்கி கணக்குகளை தொடங்கி உள்ளோம்.

எனவே, ஒவ்வொரு ஏழையின் சம்பாத்தியமும் வங்கி கணக்குக்கு நேரடியாக செல்கிறது. மாதம் ஒரு ரூபாய் செலவில் அவர்களுக்கு காப்பீட்டு வசதியும் அளிக்கப்படுகிறது.உலகமே ஒரு குடும்பம் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். எனவே, நமது வெற்றியையும், வளங்களையும் அனைவருடனும் பகிர்ந்துகொள்வோம். என்று பிரதமர் மோடி பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.