மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

சுங்க வரி உயர்வால் விலைவாசி உயரும் என வாகன ஒட்டிகள் கருத்து

விராலிமலை: சுங்கச்சாவடியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது, இக்கட்டண உயர்வு திடீரென்று உயர்த்தப்பட்டதால் இதை அறியாத வாகன ஓட்டிகள் சிலர் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவது தொடர்வதால் வாகனங்கள் நகர முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு அவ்வழியே செல்லும் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது.

News image
Updated On :1 ஏப்ரல் 2016, 1:26 pm

சி. உதயகுமார்

விராலிமலை: சுங்கச்சாவடியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது, இக்கட்டண உயர்வு திடீரென்று உயர்த்தப்பட்டதால் இதை அறியாத வாகன ஓட்டிகள் சிலர் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவது தொடர்வதால் வாகனங்கள் நகர முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு அவ்வழியே செல்லும் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது.

திருச்சி-மதுரை 131 கிமீ நான்குவழி தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு கடந்த 2010-ல் பயன்பாட்டுக்கு வந்தது. இதையடுத்து வராலிமலை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பூதகுடி அருகே சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வாகனங்களுக்கு சுங்கம் வசூலிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சுங்கக்கட்டணம் கடந்த ஏப்ரல், 1 ஆம் தேதி(1.04.2016) முதல் திருத்தி அமைக்கப்பட்டு உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கார், வேன், ஜீப் ஆகிய வாகனங்களுக்கு ஒரு முறைக்கு வசூலிக்கப்பட்ட கட்டணம் ரூ.65 தற்போது ரூ.5 உயர்த்தப்பட்டு ரூ.70 எனவும், இலகு ரக வாகனங்களுக்கு இரு முறைக்கு(ரிட்டர்ன்) ரூ.160  என்ற கட்டணம் தற்போது ரூ. 5 உயர்த்தப்பட்டு ரூ.165 ஆகவும், பேருந்து கட்டணம் ஒரு முறைக்கு ரூ. 225 கட்டணம் தற்போது ரூ. 5 உயர்த்தப்பட்டு ரூ. 230 எனவும், இருமுறை கட்டணம் ரூ. 340 தற்போது ரூ. 5 உயர்த்தப்பட்டு ரூ. 345 எனவும், லாரி ஒருமுறைக்கு ரூ. 245 தற்போது ரூ. 5 உயர்த்தப்பட்டு ரூ. 250 எனவும், இருமுறை கட்டணம் ரூ. 370 தற்போது ரூ. 10 உயர்த்தப்பட்டு ரூ. 380 எனவும், டாரஸ் ஒரு முறைக்கு ரூ. 355 தற்போது ரூ. 5 உயர்த்தப்பட்டு ரூ. 360 எனவும், இரு முறைக்கு ரூ. 535 தற்போது ரூ. 10 உயர்தப்பட்டு ரூ. 545 என கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டு உயர்த்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.