மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

தேர்தல் விழிப்புணர்வுப் பணி: மத்திய பார்வையாளர் ஆய்வு 

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை தொகுதியில் தேர்தல் விழிப்புணர்வுப் பணிகளை மத்திய தேர்தல் பார்வையாளர் நர்சிங்தேவ்

News image
Updated On :13 ஏப்ரல் 2016, 8:14 am

சி. உதயகுமார்

விராலிமலை : புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை தொகுதியில் தேர்தல் விழிப்புணர்வுப் பணிகளை மத்திய தேர்தல் பார்வையாளர் நர்சிங்தேவ் புதன்கிழமை ஆய்வு செய்தார். வரும் மே, 16-ல் நடைபெறும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, 100 சதவீத வாக்களிப்பு, ஜனநாயக முறைப்படி வாக்களித்தல் போன்றவை குறித்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இப்பணிகளைக் கண்காணிக்க மத்திய தேர்தல் விழிப்புணர்வு பார்வையாளராக நர்சிங்தேவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், விராலிமலை தொகுதியில் தேர்தல் விழிப்புணர்வுப் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, சித்தன்னவாசலில் நடைபெற்று வரும் தேர்தல் விழிப்புணர்வு பணிகளை அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர், இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குச்சாவடி மையத்துக்குச் சென்ற அவர், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், வாக்குப் பதிவை உறுதி செய்யும் கருவியில் புதிய வாக்காளர்களுக்கு வாக்குப் பதிவு குறித்து அளிக்கப்படும் பயிற்சி மற்றும் வாக்காளர் உறுதி மொழி, பெற்றோர் உறுதி மொழி பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில், மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான சு. கணேஷ், விராலிமலை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மு. வடிவேல்பிரபு, உதவி தேர்தல் அலுவலர் எஸ். பி. மனோகரன், கே. தமிழ்மணி, வட்டார வளர்ச்சி அலுவலர் து. பாஸ்கர், துணை வட்டாட்சியர் ஜெ. சரவண சதீஸ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.