நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதுவை காங். கட்சி அலுவலகம், பேரவை வளாகத்தில் ஜெ.வுக்கு அஞ்சலி

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம், காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு

News image
Updated On :6 டிசம்பர் 2016, 7:59 am

சுஜித்குமார்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம், காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு செவ்வாய்க்கிழமை முதல்வர் நாராயணசாமி உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு ஏற்கெனவே இரங்கல் தெரிவித்திருந்தார் புதுவை முதல்வர் நாராயணசாமி. இந்நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்துக்கு முதல்வர் நாராயணசாமி காலை 9 மணிக்கு மலரஞ்சலி செலுத்தினார். சட்டப்பேரவை தலைவர் வி.வைத்திலிங்கம், அமைச்சர்கள் ஏ.நமச்சிவாயம், மு.கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், எப்.ஷாஜஹான், ஆர்.கமலக்கண்ணன், பேரவை துணைத் தலைவர் விபி.சிவக்கொழுந்து, அரசுக் கொறடா அனந்தராமன், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினார்.
காங். கட்சி அலுவலகம்
புதுவை மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில தலைவர் நமச்சிவாயம் தலைமையில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் சென்னையில் நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.