நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

டிஎன்.பாளையம் கிராமத்தை தத்தெடுத்தார் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி

மணவெளி தொகுதிக்குட்பட்ட டிஎன். பாளையம் கிராமத்தை மாதிரி கிராமமாக உருவாக்க ஆளுநர் கிரண்பேடி தத்தெடுத்துள்ளார். 

News image
Updated On :11 டிசம்பர் 2016, 9:06 am

சுஜித்குமார்

மணவெளி தொகுதிக்குட்பட்ட டிஎன். பாளையம் கிராமத்தை மாதிரி கிராமமாக உருவாக்க ஆளுநர் கிரண்பேடி தத்தெடுத்துள்ளார். 

புதுச்சேரி  அருகேயுள்ள மணவெளி தொகுதிக்குட்பட்ட டிஎன்.பாளையம் கிராமத்தை ஆய்வு செய்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தத்தெடுப்பதற்கான நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  அதைத்தொடர்ந்து அப்பகுதியில் ஆய்வு செய்தார். பின்னர் ஆளுநர் கிரண்பேடி பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:

டிஎன். பாளையம் கிராமம் தூய்மையான, துர்நாற்றம் வீசாத, வைஃபை உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளையும் ஒருங்கே பெற்ற மாதிரி கிராமமாக திகழ வேண்டும். 

"தூய்மை மிக அவசியம். உடல், மனம் சுற்றுப்புறச்சூழல் தூய்மையால் வாழ்வில் முன்னேறுவதுடன் ஆரோக்கிய வாழ்வு வாழமுடியும். அத்துடன் மது அருந்தும் பழக்கத்தையும் கைவிட வேண்டும்" 

டி.என். பாளையத்தை மாதிரி கிராமமாக உருவாக்க ஒத்துழைப்பு தர வேண்டும். திறன் மேம்பாடு, கல்வி, நூலகம், தூய்மை என அனைத்தும் ஒருங்கிணைந்த மாதிரி கிராமமாக தன்னிறைவு பெற்றதாக உருவாகும். 

அரசு நிர்வாகம், ராஜ்நிவாஸ் குழு இதற்கு முழு ஒத்துழைப்பு தரும். தற்போது தூய்மையான கிராமம், தூய்மையான தொகுதி, தூய்மையான வார்டு ஆகியவற்றை தேர்வு செய்து பரிசளிக்கப்பட உள்ளதால் அனைத்து பிரிவிலும் போட்டி நிலவுகிறது. 
சாதி, மத வேறுபாடின்றி இக்கிராமத்தை முன்னேற்ற அனைவரும் பாடுபட வேண்டும். ராஜ் நிவாஸ் (ஆளுநர் மாளிகை) நிர்வாகம் இதை தத்தெடுத்துள்ளது. 
தானாக முன்வந்து இப்பகுதியிலுள்ள நிறுவனங்களும் இப்பணிகளுக்கு ஒத்துழைப்பு தருவது அவசியம். இம்முயற்சி ஒரு தொடக்கம் தான்.
சிஐஐ, அரவிந்தர் கண் மரு்ததுவமனை, என்சிசி போன்றவை அனைத்தும் இதில் ஈடுபட்டுள்ளன. சரியான தேவைகள் கண்டறியப்பட்டு இக்கிராமத்துக்கு செய்து தரப்படும் என்றார் கிரண்பேடி.

அரசு கொறடா ஆர்.கே. அனந்தராமன், தூய்மை இந்தியா திட்ட இயக்குநர் ருத்ரகௌடு உட்பட அனைத்துத் துறை  அரசு  அதிகாரிகளும்  பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.