ஆண்டாள் கோவில் தேரோட்டத்தின்போது வெடிகுண்டு வெடிக்க வாய்ப்பு: காவல்துறைக்கு மிரட்டல் கடிதம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டத்தின்போது, வெடிகுண்டு வெடிக்க வாய்ப்பு இருப்பதாயும்,


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டத்தின்போது, வெடிகுண்டு வெடிக்க வாய்ப்பு இருப்பதாயும், அதனால் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரத் தேரோட்டம் ஆகஸ்டு 5-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து அஞ்சல் செய்யப்பட்ட ஒரு தபால் வந்துள்ளது. அதில் தேரோட்டத்தின்போது வெடிகுண்டு வெடிக்க வாய்ப்பு உள்ளது. தேரோட்டத்திற்கு வரும் அனைவரையும் சோதனைக்குட்படுத்த வேண்டும். அதிகமான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் பொறுப்பு வகிக்கும் சங்கரேஸ்வரனிடம் கேட்டபோது, கடிதம் வந்துள்ளது உண்மை. மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் உத்தரவுப்படி ஆண்டாள் கோவிலில் இரு மடங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடுமையான சோதனைகளுக்குப் பின்னரே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...