கலசலிங்கத்தின் 2-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் நிறுவனத் தலைவர் தி.கலசலிங்கத்தின் 2-ம் ஆண்டு நினைவு நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.


ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் நிறுவனத் தலைவர் தி.கலசலிங்கத்தின் 2-ம் ஆண்டு நினைவு நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
லிங்கா குளோபல் பள்ளி மாணவ மாணவியர் இறைவணக்கப் பாடல் பாடினர்.பல்கலைக்கழகத்தின் வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில், இயக்குநர் டாக்டர் எஸ்.சசி ஆனந்த் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து தீபாரதனை செய்தார்.கலசலிங்கம் இசைப் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிறப்பு இசைக் கச்சேரி, பஜனை மற்றும் கீதாஞ்சலி நடத்தினர். பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப் பணித்திட்டம் சார்பில் 200 மாணவ மாணவியர் ரத்ததானம் செய்தனர்.
எஸ்.ராமச்சந்திராபுரம், கலைமகள் மேல்நிலைப் பள்ளியின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்ற மௌன ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன், டீன்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் வளாகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளின் முதல்வர்கள் பேராசிரியர்கள் கலந்து கொண்டு கலசலிங்கத்தின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழகத்தின் துணைப் பதிவாளர் டாக்டர் பி.ஜி.குருசாமிபாண்டியன் செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...