காட்டுமன்னார்கோயில் அருகே இடி தாக்கி கணவன், மனைவி உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே இடி தாக்கி கணவன், மனைவி இருவர் உடல் கருதி உயிரிழந்தனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே இடி தாக்கி கணவன், மனைவி இருவர் உடல் கருதி உயிரிழந்தனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே சோழத்தரம் பகுதியில் உள்ள புடையூர் குடிகாட்டை சேர்ந்தவர் முருகேசன் மகன் ராமலிங்கம்(48). விவசாயி. நேற்றுமாலை இவரும் இவரது மனைவி அஞ்சாயாள்(40) ஆகிய இருவரும் அதே பகுதியில் உள்ள வயல்வெளியில் ஆடு மேய்ந்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதி முழுவதும் கரும் மோகம்சூழ்ந்தது. திடீரென இடியுடன் பலத்த மழை பெய்தது. அப்போது பலத்த சத்தத்துடன் இடி விழுந்தது. இதில் இடி தாக்கி ராமலிங்கம் மற்றும் அவரது மனைவி அஞ்சாயாள் ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த சோழத்தரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு உடல்களை கைப்பற்றி பிரேத பிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப வைத்தனர். மேலும்இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...