சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் பதிணென் பாஷாணத்தில் சக்தி வாய்ந்த முருகன் சொரூபம் உருவாக்கம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீபோகரின் வாக்குப்படி உலகிலேயே முதல் முறையாக பதிணென் பாஷணத்தில் சக்தி வாய்ந்த இரு ராஜ அலங்கார முருகன், இரு விநாயகர், இரு சிவன் மற்றும் ஐயப்பன், ஆஞ்சநேயர், மீனாட்சி, வெங்கடாச்சலபதி மற்றும் மகாலட்சுமி சொரூபங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

News image
Updated On :16 ஜூன் 2016, 2:24 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீபோகரின் வாக்குப்படி உலகிலேயே முதல் முறையாக பதிணென் பாஷணத்தில் சக்தி வாய்ந்த இரு ராஜ அலங்கார முருகன், இரு விநாயகர், இரு சிவன் மற்றும் ஐயப்பன், ஆஞ்சநேயர், மீனாட்சி, வெங்கடாச்சலபதி மற்றும் மகாலட்சுமி சொரூபங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

கிருஷ்ணன்கோவில்-வத்திராயிருப்பு சாலையில் கடந்த 17 ஆண்டுகளாக ஸ்ரீகாயத்ரி தியான பீடம் உள்ளது. இங்கு அபூர்வ ருத்ராட்ச மரம், 13 இதழ் கொண்ட அபூர்வ வில்வ மரம் மற்றும் விஸ்வாமித்ரருக்கு இங்கு தனிக் கோவில் உள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இக் கோவிலை ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ரத வீதியைச் சேர்ந்த எஸ்.மகேஸ்வரன் நிர்வகித்து வருகிறார்.

இவரது உறவினர்களின் சிறு குழந்தைகள் மூவர் மூலம் இவருக்கு சித்தர் போகர் கீழ்கண்டவாறு வாக்கு அருளியுள்ளார்.கலி தோன்றிய 205-ம் வருடம் ககன மார்க்கமாய் மஞ்சள் நிற இனத்தார் வாழும் நாடு சென்று கற்ற வித்தைகளை, குருவாம் ஸ்ரீஅகத்தியப் பெருமான் கொடுத்த சாப நிவிர்த்தி வேண்டி குஹனை இருவடிவில் அமைத்தோம். பழனி, பூம்பாறை என்ற மலைவாசஸ்தலங்களில் மக்கள் நன்மைக்காகப் பிரதிஷ்டை செய்தோம். கற்பம்கோடி காலம் என்று கற்பமாம் பாஷாணம் கோடி காலம் இருக்கும் என விரும்பினாலும் விதிவலிது சாரமாய் 5 ஆயிரம் ஆண்டுக்குள் தண்டபாணியைச் சுரண்டி விட்டனர்.

துரிய தரிசனத்தில் கண்டமையால் மற்றைச் சரவணபவனைச் சமைக்கும் மானுடப் பிறவியாளன் 5116-ம் ஆண்டில் (2016), வலது கரத்தில் மூன்று மூலச் சக்கரங்களுடன் விளங்குவனாய் தசமாறு ஆண்டுகளில் 18 லட்சம் மூல மந்திரம் ஜெபித்து ராஜவேலர் சித்தவேலர் தமைச் சமைப்பான்.இந்த அருள்வாக்கின்படி 9+9 என பதிணென் பாஷாணமும், 18 மூலிகைகளும், 16 பஸ்பங்களும், கங்கை அலகாபாத்-திரிவேணி, மெய்கண்டார் குகை சுனை, பொதிகை, கல்யாணி தீர்த்தம், முக்கடல் தீர்த்தங்களோடு பஞ்சகவ்வியமாம் கோ-மூத்திரம், காடியுடன் சதுர்வேதம் குறிக்கும் நால்வகை மண்ணும் கூட்டி, மூன்று சிறார்களின் மூலம் ஸ்ரீபோகர்பிரான் வழிகாட்டுதலால் தலா இரு ராஜ அலங்கார முருகன், விநாயகர், சிவன் சிலைகளும், ஐயப்பன், ஆஞ்சநேயர், மீனாட்சி, வெங்கடாஜலபதி, மகாலட்சுமி சிலைகளும் உருவாக்கப்பட்டுள்ளது.இது குறித்து மகேஸ்வரன் கூறியதாவது:

குருநாதர் வாக்குப்படி இந்த சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை உருவாக்க 6 ஆண்டுகளாய் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, 8 முறை இவற்றை உருவாக்கித் தோல்வியடைந்தேன். புடம்போடும் போது உடைந்து விடும். உலகிலேயே முதல் முறையாக பதிணென் பாஷாணாத்தால் உருவாக்கப்பட்ட சிலைகள் இவைதான். இவற்றை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட பதிணென் பாஷாணத்தால் சிறு சிறு உருண்டைகள் உருவாக்கப்பட்டு இவை வேண்டுவோறுக்கு நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தமாக வழங்கப்படும்.

இதில் பதிணென் பாஷணம் உள்ளதா? என்பதை இந்த உருண்டைகளைப் பயன்படுத்தி ஆய்வுக்குட்படுத்தலாம். சுவாமி சிலைகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அபிஷேகம் நீர் கொண்டு செய்யப்படும். இது மனித சிந்தனை மற்றும் முயற்சிக்கு அப்பாற்பட்டது. சிலைகள் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்போது பாதுகாப்பு காரணமாக கிருஷ்ணன்கோவில் காயத்ரி தியான பீடத்தில் வைக்க இயலவில்லை.

தை பூசத்திற்கு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு அங்கு நிரந்தரமாக இவை வைக்கப்பட்டு வழிபாடு நடைபெறும்.தற்போது இந்த சுவாமி சிலைகளை கண்டு, சுவாமி தரிசனம் செய்ய விரும்புவோர், தினமும் காலை மற்றும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை வரலாம். மேலும் இது குறித்த விவரங்களுக்கு 98424-09306 மற்றும் 98424-09304 ஆகிய செல்லிடை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.