தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அதிமுக, திமுக அல்லாத கட்சிகளுடன் கூட்டணி: இல. கணேசன்

அதிமுக, திமுக அல்லாத கட்சிகளுடன் பேரவைத் தேர்தலை பாரதிய ஜனதா கட்சி சந்திக்கும் என்று அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் தெரிவித்தார்.

News image
Updated On :13 மார்ச் 2016, 8:28 am

ஷேக் அப்துல்காதர்

அதிமுக, திமுக அல்லாத கட்சிகளுடன் பேரவைத் தேர்தலை பாரதிய ஜனதா கட்சி சந்திக்கும் என்று அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் தெரிவித்தார்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலியில் தொடங்கியது. கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மாநிலத் தலைவருமான இல. கணேசன் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் நேர்காணல் நடத்தினர்.

அப்போது இல. கணேசன் அளித்தப் பேட்டி: நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு இருந்த காங்கிரஸ் கட்சி இப்போது இல்லை. விடுதலைக்காக போராடிய மகாத்மா காந்தி, காமராஜர் போன்றோர் இருந்த காங்கிரஸ் கட்சி இப்போது, நாட்டுக்கு எதிராக செயல்படுவர்களுடன் தொடர்பு வைத்துள்ளது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சி ஜனநாயக உரிமையை இழந்து விட்டது. சோனியா காந்திக்கும், ராகுல்காந்திக்கும் நாட்டின் மீது அக்கரை இல்லை. சில தினங்களுக்கு முன் பேசிய குலாம்நபிஆசாத், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தையும், பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். அமைப்பையும் சமப்படுத்தி பேசியிருக்கிறார். ஆகவே காங்கிரஸ் கட்சி புறக்கணிக்க வேண்டிய கட்சி.

சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்ட மண் திருநெல்வேலி. சுப்பிரமணியபாரதி, வ.உ. சிதம்பரனார், ஒண்டிவீரன் போன்ற பலர் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்து செல்ல அடிப்படையாக அமைந்த தைப்பூச மண்டபத்தை புதுப்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் பேரவைத் தேர்தல் பணியை 6 மாதங்களுக்கு முன்பே பாரதிய ஜனதா கட்சி தொடங்கி விட்டது. 234 தொகுதிகளிலும் போட்டியிட 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விருப்பமனு அளித்துள்ளனர். 50 லட்சம் உறுப்பினர்களை கொண்ட பாஜக தமிழகத்தில் வலுவான சக்தியாக திகழ்ந்து வருகிறது. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால் கட்சியின் வலிமை மேலும் அதிகரிக்கும்.
போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் ஒரே இடத்தில் நேர்காணல் நடத்துவது சாத்தியமில்லை என்ற அடிப்படையில் 12 கோட்டமாக பிரித்து இந்த நேர்காணல் நடத்தப்படுகிறது. அடுத்தக்கட்டமாக தொகுதி அளவில் மாநாடு நடத்தப்படும்.2014 இல் மக்களவைத் தேர்தலில் பாஜக அதிமுக, திமுக  அல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

பேரவைத் தேர்தலிலும் அதேநிலைபாட்டில்தான் பாரதிய ஜனதா கட்சி கொண்டுள்ளது. தனித்துப் போட்டி என விஜயகாந்த் அறிவித்துள்ளார். எனினும் தேமுதிகவை தலைமை ஏற்கும் கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்திருந்த  தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளுடன் பேசிவிட்டோம்.

பாஜக முதல்வர் வேட்பாளரை அறிவித்து தேர்தல் சந்திக்காது. அதேநேரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளின் முடிவுக்கு ஏற்ப முதல்வர் வேட்பாளர் அறிவிப்பது குறித்து பரிசிலிக்கப்படும். தமிழக அரசியலில் குழப்பம் நீடிக்கிறது. தேர்தலுக்கு கால அவசாகம் இருப்பதால் இந்த நிலை காணப்படுகிறது. விரைவில் குழப்பத்துக்கு தீர்வு கிடைக்கும். கடனை வசூலிக்க மேற்கொண்ட நடவடிக்கை கண்டனத்துக்குரியது. விவசாயக் கடனை வசூலிக்கும் பணியில் வங்கிகள் மனித நேயத்துடன் செயல்பட வேண்டும்.

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். இந்தியாவில் பிற மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் அமைதியாக நடைபெறுகிறது. விதி மீறல்கள் இல்லை. ஆனால் தமிழகத்தில்தான் தேர்தல் விதி மீறல்கள் அதிகம் உள்ளன. தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்றார் அவர். பேட்டியின்போது, கட்சியின் கோட்டப் பொறுப்பாளர் ஏ.என். ராஜாகண்ணன், இணைப் பொறுப்பாளர் எஸ்.வி. அன்புராஜ், மாநில செயலர் சி. தர்மராஜ், கிழக்கு மாவட்டத் தலைவர் அ. தயாசங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.