நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அண்ணாமலைப் பல்கலை. மாணவர் தூக்கிட்டு தற்கொலை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல மாணவர் ஒருவர் அண்ணாமலைநகரில் உள்ள உறவினர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News image
Updated On :24 மார்ச் 2016, 1:59 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல மாணவர் ஒருவர் அண்ணாமலைநகரில் உள்ள உறவினர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கொத்தட்டை நாகவள்ளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சந்திரசேகரன் மகன் சதீஷ்குமார் (20). இவர் அண்ணாமலைநகர் திருவக்குள்ளம் பகுதியில் உள்ள அத்தை வசந்தா வீட்டில் தங்கி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் புலத்தில் 3-ம் ஆண்டு பயின்று வருகரிறார். வியாழக்கிழமை மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சதீஷ்குமார் படுக்கை அறையில் பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து மாணவரின் அண்ணன் சந்தோஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.