/

தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: திருமலை நாயக்கர் பண்பாடு பாதுகாப்பு பேரவை அறிவிப்பு

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று மாமன்னர் திருமலை நாயக்கர், வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாடு மற்றும் அறக்கட்டளை பாதுகாப்புப் பேரவை தெரிவித்துள்ளது.

News image
Updated On :6 மே 2016, 2:00 pm

கோ.ஜெயக்குமார்

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று மாமன்னர் திருமலை நாயக்கர், வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாடு மற்றும் அறக்கட்டளை பாதுகாப்புப் பேரவை தெரிவித்துள்ளது.

பேரவையின் செயற்குழுக் கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று புரவலர் வி.எம்.எஸ்.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பேரவையின் தலைவர் வி.ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும், பேரவையின் கொள்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் தூய்மையான, காட்சிக்கு எளிமையான, சாதி பாகுபாடு காணாத, கடுஞ்சொல் பேசாதவர்களைத் தேர்ந்தெடுங்கள். யார் வெற்றி பெற்றால் உங்கள் தொகுதி வளம் பெரும் என்று நினைக்கிறீர்களோ, அவர்களுக்கு வாக்களியுங்கள். சிறிதும் சாதி உணர்வுகளுக்கு இடம் கொடுத்து துண்டாட விடாதீர்கள். ஏழை மக்கள் எளிதில் சந்தித்து குறைகளைக் கூறினால் மனதார ஏற்பவரை, பழி வாங்கும் எண்ணம் இல்லாதோரைத் தேர்ந்தெடுங்கள்.

சாதி சங்கங்களில் எல்லா அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள். எனவே பேரவை தனிப்பட்ட எந்த ஒரு அரசியல் கட்சிக்கு மட்டும் தனியாக ஆதரவு அளிப்போம் என்று கூறவில்லை. அவரவர்கள் விருப்பப்படி வருகின்ற தேர்தலில் நல்ல வேட்பாளர்களைத் தேர்வு செய்து அவரவர் தொகுதியை மேம்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.