நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதுச்சேரியில் பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் மூடியிருந்ததால் மக்கள் அவதி

புதுச்சேரியில் பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டிருந்ததால் பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகியினர்.

News image
Updated On :11 நவம்பர் 2016, 10:11 am

சுஜித்குமார்

புதுச்சேரி, 

புதுச்சேரியில் பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டிருந்ததால் பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகியினர்.

இந்தியா முழுவதும 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் கையில் பணம் இருந்தும் யாராலும் செலவு செய்ய முடியாத சூழல் உருவானது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

இந்நிலையில் வங்கிகளுக்கு நேரடியாகச் சென்று பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பையடுத்து, வியாழக்கிழமை வங்கிகளுக்கு மக்கள் சென்று பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி வந்தனர். ரூ.4000 ரூபாய் வரை மட்டுமே மாற்ற முடியும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஏடிஎம் மையங்கள் வெள்ளிக்கிழமை முதல் இயங்கும். அதில் அதிகபட்சமாக ரூ.2000 வரை எடுக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரியில் ஏடிஎம்கள் மூலமாக பணத்தை எடுக்கலாம் என நினைத்து மக்கள் காலை முதலே வரிசையில் காத்திருந்தனர்.

காலை 7 மணியில் இருந்து மக்கள் ஏடிஎம் மையங்களின் வாசல்களில் காத்துக்கிடந்தனர். பல இடங்களில் இன்னும் ஏடிஎம் மையங்கள் திறக்கப்படாததால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் பெரும்பாலா ஏடிஎம் மையங்கள் மூடியே கிடேந்தன.

சில தனியார் வங்கி ஏடிஎம் மையங்களில் மக்கள் பணம் எடுத்துச் சென்றனர். இந்நிலையில் ரூ.2000 வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என்பதால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். வீட்டுச் செலவுக்கு கூட போதுமான பணம் எடுக்கமுடியவில்லை என ஆதங்கத்துடன் சென்றனர்.

நேரு வீதி, புஸ்ஸி வீதி, மிஷன் வீதி உள்ளிட்ட இடங்களில் சில தனியார் வங்கி ஏடிஎம்கள் மட்டுமே இயங்கின. அனைத்து ஏடிஎம் மையங்களிலும் பணம் போடும் பணி நிறைவடைந்தவுடன், ஒவ்வொரு மையமாக திறக்கப்பட்டு மாலைக்குள் அனைத்து ஏடிஎம் மையங்களும் முழுவதுமாக செயல்படத் தொடங்கிவிடும் என வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.