நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் தேர்தல் பிரசாரம்

மதச்சார்பற்ற அணி வேட்பாளர் என்ற வகையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நெல்லித்தோப்பு தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

News image
Updated On :16 நவம்பர் 2016, 10:06 am

சுஜித்குமார்

புதுச்சேரி,

மதச்சார்பற்ற அணி வேட்பாளர் என்ற வகையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நெல்லித்தோப்பு தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் நாரயாணசாமி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக ஏற்கெனவே கூட்டண கட்சிகளான திமுக, விசிக, மமக, முஸ்லீம் லீக், புதிய நீதிக்கட்சி உள்ளிட்டவை தீவிர பிரசாரம் செய்து வருகின்றன.

ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் வேட்புமனுத்தாக்கலுக்கு முன்பு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தருமாறு கடிதம் அளித்தார். இதில் விசிக தான் அதன் தலைவர் திருமாளவன் அனுமதியோடு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய முன்வந்தது.

அதன்படி முதல்வர் நாராயணசாமியோடு தொகுதி முழுவதும் விசிக நிர்வாகிகள் வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேரடியாக காங்கிரஸ் வேட்பாளரான நாராயணசாமிக்கு வாக்கு சேகரிக்காமல் மதச்சார்பற்ற அணி வேட்பாளர் என்ற வகையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.

அக்கட்சி நிர்வாகிகள் நாரா.கலைநாதன், சலீம், கே.முருகன் உள்பட பலர் பிரசாரம் செய்து வருகின்றனர். 

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பாஜக பிரசாரம் செய்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு மதச்சார்பற்ற அணி என்ற வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.