நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மீனவர் விடுதலை வேங்கைகள் ரயில் மறியல் போராட்டம்: 50 பேர் கைது

இலங்கை கடற்படையால் சுடப்பட்ட மீனவர்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை புதுவையில் ரயில் மறியலில் ஈடுபட்ட மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பினர் 50 பேர் கைது ச

News image
Updated On :21 நவம்பர் 2016, 7:33 am

சுஜித்குமார்

புதுச்சேரி, 

இலங்கை கடற்படையால் சுடப்பட்ட மீனவர்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை புதுவையில் ரயில் மறியலில் ஈடுபட்ட மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை கடற்படையால் சுடப்பட்ட மீனவர்களுக்கு தமிழக-புதுவை அரசுகள் ரூ.-10 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும். இலங்கை தூதரை அழைத்து மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள், பறிமுதல் செய்துள்ள படகுகளை உடனே விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் ரயில் போக்குவரத்து 30 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது.

புதுச்சேரி ரயில் நிலையத்தில் மங்களூர்-புதுச்சேரி விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீஸôர் கைது செய்தனர்.

முன்னதாக உலக மீனவர்கள் தினத்தை முன்னிட்டு மீனவர்கள் விடுதலை வேங்கைகள் கழக தலைவர் மங்கையர்ச்செல்வன் தலைமையில் ஏராளமானோர் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டுச் சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.