நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நெல்லித்தோப்பு இடைத்தேர்தல் வெற்றி: முதல்வர் நாராயணசாமி தலைமையில் கூட்டணி கட்சிகள் வெற்றி ஊர்வலம்

நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்றி முதல்வர் நாராயணசாமி தலைமையில் கூட்டணி கட்சிகள் வெற்றி ஊர்வலம் மேற்கொண்டன.

News image
Updated On :22 நவம்பர் 2016, 7:53 am

சுஜித்குமார்

புதுச்சேரி, 

நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்றி முதல்வர் நாராயணசாமி தலைமையில் கூட்டணி கட்சிகள் வெற்றி ஊர்வலம் மேற்கொண்டன.

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளரான நாராயணசாமி 11144 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

அப்போது அவரது வெற்றிச் செய்தி அறிவிக்கப்பட்டவுடன் கல்லூரி வளாகத்தில் குழுமியிருந்த காங்கிரஸ்-திமுக கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். முதல்வர் நாராயணசாமியை தூக்கிச் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் அவரது தலைமையில் அஜந்தா சிக்னலில இருந்து தொடங்கி மோட்டார் சைக்கிள் வெற்றி ஊர்வலம், எஸ்வி.பட்டேல் சாலை, கடற்கரைச் சாலை, புஸ்ஸி வீதி, வழியாக அண்ணா சாலை, நெல்லித்தோப்பு தொகுதி முழுமையாக சென்றது.
பின்னர் பல்வேறு தலைவர்களின் சிலைகளுக்கு முதல்வர் நாராயணசாமி மாலை அணிவித்தார்.

மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.நமச்சிவாயம், அமைச்சர்கள் ஷாஜஹான், கந்தசாமி, கமலக்கண்ணன், மல்லாடி கிருஷ்ணாராவ், முன்னாள் எம்.எல்.ஏ. ஜான்குமார், திமுக

மாநில அமைப்பாளர்கள் இரா.சிவா எம்.எல்.ஏ. எஸ்.பி.சிவக்குமார், விசிக முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், மற்றும் புதிய நீதிக்கட்சி, மமக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் உடன் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.