அரசு ஊழியர்கள் மின்னணு பணப்பரிமாற்ற முறையை கடைபிடிக்க வேண்டும்: கிரண்பேடி வலியுறுத்தல்
புதுச்சேரி மாநில அரசு ஊழியர்கள் மின்னணு பணப்பரிமாற்ற முறையையே கடைபிடிக்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தி உள்ளார்.


புதுச்சேரி,
புதுச்சேரி மாநில அரசு ஊழியர்கள் மின்னணு பணப்பரிமாற்ற முறையையே கடைபிடிக்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தி உள்ளார்.
ஜிப்மர் மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற சிறுநீரக சிறப்பு சிகிச்சை பிரிவை தொடங்கி வைத்தபின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி மாநில மக்கள் அனைவரும் ரொக்கமில்லா பரிவர்த்தனை (மின்னணு பணப்பரிமாற்ற முறைக்கு மாற வேண்டும். இதற்காக தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர், வணிகவரித்துறை ஆணையர் ஆகியோர் இதுதொடர்பாக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அனைத்து வணிகர்கள், வர்த்தகர்கள், வங்கி அதிகாரிகளுடன் ஏற்கெனவே ஆலோசனை நடத்தப்பட்டது. அனைவரும் மின்னணு பணப்பரிமாற்ற முறைக்கு மாற தயாராகி வருகின்றனர்.
அரசு ஊழியர்கள் ஊதியம்
புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கு மின்னணு பணப்பரிமாற்ற முறையில் தான் ஊதியம் வழங்கப்படும். ரொக்கப்பணம் தேவையென்றால் அரசு ஊழியர்கள் தங்கள் துறைத் தலைவர்களை அணுகலாம்.
முதலில் ஏழை, எளிய சாதாரண மக்களுக்கு தான் ரொக்கம் கிடைக்கச் செய்வதில் முன்னுரிமை தர வேண்டும். தற்போது புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்துக்கு விடப்பட்டுள்ளதால் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு படிப்படியாக குறையும்.
ஒப்பந்ததாரர்களுக்கும் ரொக்கம் இல்லை
புதுச்சேரி அரசு துறைகளில் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தததாரர்களுக்கு பல நூறு கோடி ரூபாய் ரொக்கமாக தரப்பட்டு வருகிறது. இனிமேல் இந்த நடைமுறை மாற்றப்படும். அவர்களுக்கும் மின்னணு பணப்பரிமாற்ற முறையில் தான் ஒப்பந்தாதரர்களுக்கும் தொகை வழங்கப்படும்.
கருப்பு பணம், ஊழலை ஒழிக்க ஏதுவாக புதுச்சேரி மாநில மக்களும் மின்னணு பணப்பரிமாற்ற முறைக்கு மாற வேண்டும் என்றார் கிரண்பேடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...