ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

எல்லையில் துப்பாக்கிச்சண்டை: காஷ்மீரில் பதற்றம்

ஜம்மு-காஷ்மீர் மாநில தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள அரசு அலுவலகத்தை இன்று தீயிட்டு எரித்த பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்

News image
Updated On :10 அக்டோபர் 2016, 11:42 am IST

ஜம்மு-காஷ்மீர் மாநில தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள அரசு அலுவலகத்தை இன்று தீயிட்டு எரித்த பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.

காஷ்மீரின் பாம்போர் என்ற இடத்தில் மாநில அரசுக்கு சொந்தமான தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிலகத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த கட்டிட வளாகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் பாதுகாப்பு கருதி உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

தீப்பற்றி எரியும் அந்த கட்டிடத்தில் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்டதாக அப்பகுதியை சேர்ந்த ஒரு ராணுவ வீரர் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நீடித்து வருவதாகவும், இதில் ராணுவ வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கட்டிட வளாகத்தில் 2 முதல் 3 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

இதே கட்டிடத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பாதுகாப்பு படைகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையில் தொடர்ந்து 48 மணிநேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.