மதுக்கடைகளை மூடும் உத்தரவை புதுவை அரசு செயல்படுத்தும்:அமைச்சர் நமச்சிவாயம்


புதுச்சேரி: தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை மூடுவது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவை புதுவை அரசு முறையாக செயல்படுத்தும் என கலால்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக்கடைகளை மார்ச் 31-ம் தேதிக்குள் மூட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, தமிழகம், புதுச்சேரி மாநில அரசுகள் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தன. அதை விசாரித்த நீதிமன்றம் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் கலால் வருவாயை முக்கியமாக நம்பியுளள புதுவையிலும் 168 கடைகள் மூடப்படுகின்றன. இதுகுறித்து கலால்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:
மாநில அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டாலும், உச்சநீதிமன்ற உத்தரவு முக்கியமானது. அதை முழுமையாக செயல்படுத்துவோம். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகள் மூடப்படும்.
ஆளுநர் கையெழுத்தின்றி உத்தரவு
உரிமை மீறல் புகார் தொடர்பாக ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். சட்டப்பேரவையை பொறுத்தவரை அவரின் முடிவு தான் இறுதியானது.
நகராட்சி ஆணையர் மக்கள் பிரதிநிதிகளை மதிக்காமல் செயல்பட்டார் என்பதால் தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவரை மாற்றியது செல்லாது என வந்த உத்தரவில் ஆளுநர் கையெழுத்து இல்லை. இபிரச்னை தொடர்பாக தேவைப்பட்டால் ஆளுநரை நேரில் சந்திக்கவும் செய்வோம் என்றார் நமச்சிவாயம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...