மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜெயலலிதாவும் சசிகலாவும் மருத்துவமனையில் உரையாடிய வீடியோ காட்சிகள் வெளிவந்தால்..!: திவாகரன் மகன் ஜெயானந்த் முகநூல் பதிவு

சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் அண்மையில் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில், ஜெயலலிதாவும் சசிகலாவும்

News image
Updated On :20 ஏப்ரல் 2017, 2:49 pm

DIN

சென்னை:  சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் அண்மையில் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில், ஜெயலலிதாவும் சசிகலாவும் மருத்துவமனையில் உரையாடிய வீடியோ காட்சிகள் வெளிவந்தால்... அந்த நாள் மிக விரைவில் என பதிவிட்டுள்ளார்.

ஜெயானந்த் பேஸ்புக் பதிவில் கூறியுள்ளதாவது: கொலை பழி சுமத்தியும் அம்மா அவர்களின் சிகிச்சை படத்தை வெளியிட வில்லை... காரணம் பச்சை கவுன் உடையில் அம்மா அவர்களின் எதிரிகள் அதை பார்க்க கூடாது என்பதே ஒரே காரணம் இது தியாகத்தலைவி சின்னம்மாவின் செயல்...

சிங்கத்தை நாங்கள் சிங்கமாகவே பூ உலகை ஆளுவதற்க்கு ராஜ மரியாதையுடன் அனுப்பி வைத்தோம் ஆனால் ஓ.பி.எஸ் கேவலம் ஓட்டுக்காக புரட்சித்தலைவி அம்மா அவர்களை பிணப் பெட்டியில் வைத்து தற்போது ஓட்டு கேட்கிறார்

உண்மை வலிமையானது ஒருநாள் புரட்சித் தலைவி அம்மா அவர்களும்,தியாக தலைவி சின்னம்மா இருவரும் மருத்துவமனையில் உரையாடல்கள் வீடியோ வெளிவந்தால்...? P.H.பாண்டியன், மனோஜ்பாண்டியன், ஓ.பன்னீர்செல்வம் இவர்களை என்ன செய்யலாம்...? அந்த நாள் மிக விரைவில்.... இவ்வாறு ஜெயானந்த் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயானந்த் பதிவிட்டுள்ளதன் அடிப்படையில் அப்பல்லோ ரகசிய வீடியோக்கள் ஏராளமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.