அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியர்கள், ஊழியர்கள் 6 ஆயிரம் பேர் பணி நிரவல் செய்யப்படுவார்கள்: துணைவேந்தர் செ.மணியன் தகவல்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து சுமார் 6 ஆயிரம் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து சுமார் 6 ஆயிரம் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு பணி நிரவல் (Deputation) செய்யப்படுவார்கள் என துணைவேந்தர் செ.மணியன் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சுமார் 12500 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். பல்கலைக்கழகம் நிதி நெருக்கடி சிக்கியுள்ளதால், மாதந்தோறும் ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழகஅரசு, பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 6 ஆயிரம் பேரை பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் காலியாக உள்ள பணியிடங்களில் படிப்படியாக பணி நிரவல் செய்ய முடிவு எடுத்துள்ளது.
இதுகுறித்து துணைவேந்தர் செ.மணியன் தெரிவித்தது: பல்கலைக்கழகத்தில் உள்ள சுமார் 6 ஆயிரம் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமிழகத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விரைவில் படிப்படியாக பணி நிரவல் செய்யப்படுவார்கள். இதில் 1100 ஆசிரியர்கள் அடங்குவார்கள். மேலும் இந்த கல்வி ஆண்டில் பிஇ சிவில் மற்றும் மெக்கானிக்கல் படிப்புகளை தவிர மற்ற படிப்புகளுக்கு கல்வி கட்டணம் ரூ.55 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.
2017-18 கல்வி ஆண்டில் அண்ணாமலைப் பல்கலையில் பொறியியல் படிப்பில் 1020 மாணவ, மாணவியர்கள் சேர்க்க ஏஐசிடி (AICT) அனுமதி வழங்கியுள்ளது. அதேபோன்று மருத்துவக்கவுன்சில், பல்கலைக்கழக மருத்துவக்கல்லுரியில் முதுகலை படிப்பிற்கு மேலும் 6 இடங்களை உயர்த்தி அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே முதுகலை மருத்துவப்படிப்பிற்கு மொத்தம் 121 பேர் அனுமதி சேர்க்கை செய்யப்பட்டனர். வரும் கல்வி ஆண்டில் 127 பேர் அனுமதி சேர்க்கை செய்யப்படுவார்கள் என துணைவேந்தர் செ.மணியன் தெரிவித்தார். பேட்டியின் போது பதிவாளர் கே.ஆறுமுகம் உடனிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...