நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அண்ணாமலைப் பல்கலை தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் விண்ணப்ப விற்பனை தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககம் சார்பில் 2017-2018 ஆம் கல்வி ஆண்டின் மாணவர்கள்

News image
Updated On :24 ஏப்ரல் 2017, 1:29 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககம் சார்பில் 2017-2018 ஆம் கல்வி ஆண்டின் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகத் தொடக்கவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.மணியன் விழாவில் பங்கேற்று மாணவ, மாணவியர்களுக்கு விண்ணப்பங்களை வழங்கி விற்பனையை தொடங்கி வைத்தார். தொலைதூரக்கல்வி இயக்கக இயக்குநர் முனைவர் எம்.அருள் வரவேற்றார்.

இவ்விழாவில் பதிவாளர் முனைவர் கே. ஆறுமுகம், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர் ஆர்.எம்.சந்திரசேகரன், முன்னாள் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் கே.கதிரேசன், கல்வி வளர்ச்சி இயக்குநர் கே.மணிவண்ணன், புல முதல்வர்கள் சி.ஆண்டனி ஜெயசேகர் (பொறியியல்), எம்.ரவிச்சந்திரன் (விவசாயம்), மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் முனியப்பன் மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் துணைவேந்தர் செ.மணியன் செய்தியாளர்களிடையே தெரிவித்தது: அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககம் இந்தியாவிலேயே முதல் முறையாக  1979-ல் தொடங்கப்பட்டது. கடந்த 2015-16 ஆண்டு 98 ஆயிரத்து 919 மாணவர்கள் அனுமதி சேர்க்கை செய்யப்பட்டனர். 2016-17 ஆண்டு ஒரு லட்சத்து 1729 மாணவர்கள் அனுமதி சேர்க்கை செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 259 படிப்புகள் நடத்தப்படுகின்றன.

தமிழகத்தில் 42 படிப்பு மையங்களும், வெளி மாநிலங்களில் 17 படிப்பு மையங்களும் இயங்குகின்றன. வருகிற கல்வி ஆண்டில் எம்எஸ்சி இயந்திர மதிப்பியல், பிஏ கம்யூனிகேட்டிவ் இன்ஜினியரிங் உள்ளிட்ட 10 புதிய படிப்புகள் தொடங்கப்படவுள்ளனர்.தற்போது பல்கலைக்கழக அச்சகம் நவீனப்படுத்தப்பட்டு அனைத்து புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டு, மாணவர்களுக்கு அனுமதி சேர்க்கையின் போதே உடன் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள 3300 கல்வி நிறுவனங்களில் மத்தியஅரசு மனித வள மேம்பாட்டுத்துறையின் தேசிய தர நிர்ணய நிறுவனம் ஆய்வு செய்து சிறந்த 100 கல்வி நிறுவனங்களை தேர்வு செய்தது. அதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக 92 வது இடத்தையும், பல்கலைக்கழகங்கள் அளவில் 56-வது இடத்தையும் பெற்றுள்ளது.

இதற்கான விருதினை அண்மையில் புதுதில்லியில் குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொலைதூரக்கல்வி இயக்ககம் மூலம் பயில விரும்புகின்ற மாணவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்து படிப்பு மையங்களிலும் திங்கள்கிழமை முதல் விண்ணப்பங்களை பெற்று சேர்ந்து பயனடையவேண்டுகிறேன் என துணைவேந்தர் எஸ்.மணியன் தெரிவித்தார்.

விபரங்களுக்கு தொலைபேசி எண்கள:04144–238043 to 238047, 238610, 

இணையதளம்: www.annamalaiuniversity.ac.in  or www.audde.in , மின்னஞ்சல்:   ddedirector2013@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.