இந்தியாவுடன் அணு ஆயுதப் போருக்கு வாய்ப்பு: பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மிரட்டல்
இந்தியாவுடன் அணு ஆயுதப் போருக்கான சாத்தியம் இருப்பதாக பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாசர் கான் ஜஞ்சுவா


இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் அணு ஆயுதப் போருக்கான சாத்தியம் இருப்பதாக பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாசர் கான் ஜஞ்சுவா தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் நடந்த தேசிய பாதுகாப்புக்கான கருத்தரங்கில் பங்கேற்ற அந்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் நாசர் கான் ஜஞ்சுவா, பயங்கரமான அணு ஆயுதங்களை இந்தியா சேமித்து வைத்துக் கொண்டு, பாகிஸ்தானுடன் போரிட முனைப்புடன் இருப்பதாக குற்றம்சாட்டினார்.
தெற்காசிய பிராந்தியத்தை பொறுத்தவரை அமைதிக்கான சமநிலை, இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் அணு ஆயுதப் போருக்கு வழிவகுத்து விடும் என்றும் மிரட்டும் தொனியில் அவர் பேசினார்.
சீனா-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதையையும் அமெரிக்கா எதிர்த்தது என்றும் சீன-பாகிஸ்தான் வர்த்தக முனைய திட்டத்தை சீர்குலைப்பதற்காக இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா சதி செய்வதாகவும் ஜஞ்சுவா குற்றம்சாட்டினார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரமாகி வருவதால் இந்தியா இன்னும் அதிகமான ஆயுதங்களைக் குவித்து வருகிறது என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...