பொருளாதார ஆய்வறிக்கை உண்மை நிலையை பிரதிபலிக்கிறது: சிஐஐ
மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை உண்மை நிலையை பிரதிபலிக்கிறது என இந்திய தொழில் கூட்டமைப்பு இயக்குநர்


புதுச்சேரி: மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை உண்மை நிலையை பிரதிபலிக்கிறது என இந்திய தொழில் கூட்டமைப்பு இயக்குநர் ஜெனரல் சந்திரஜித் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) புதுச்சேரி பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பு: பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் மொத்த உற்பத்தி தற்காலிகமாக குறைந்துள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை முடிந்தவுடன், மீண்டும் வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாகி விடும். மத்திய தலைமை பொருளாதார ஆலோசகர் டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியம் இந்திய பொருளாதார நிலையின் உண்மையை ஆய்வறிக்கையில் பிரதிபலித்துள்ளார்.
உலக பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டாலும் மத்திய அரசின் நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் திடமாக இருந்தது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை நீண்ட கால நோக்கில் நல்ல பலனைத் தரும். இதனால் ரொக்கமில்லா பரிவர்த்தனை அதிகரிப்பு, ரியல் எஸ்டேட் வணிகத்தில் விலைக்குறைப்பு, அதிக வரி வருவாய் கிட்டும்.
அதிகளவில் டிஜிட்டல்மயம், வரிக்குறைப்பு, பத்திரப்பதிவு கட்டணம் குறைப்பு, சரக்கு சேவை வரிவிதிப்பில் ரியல் எஸ்டேட், நிலத்தையும் சேர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...