நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் உள்ளாட்சித் தேர்தல்: முதல்வர் நாராயணசாமி

News image
Updated On :26 பிப்ரவரி 2017, 10:32 am

சுஜித்குமார்

புதுச்சேரி: உள்ளாட்சிகளில் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட பெரியகாலாப்பட்டு  ஸ்ரீ பாலமுருகன் ஆலய தெப்பக்குளத்தை  ரூ 1.6 லட்சத்தில் புனரமைப்பது, பாலமுருகன் கோவிலை சுற்றி ரூ.50 லட்சம் செலவில் சுற்று மதில் சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை முதல்வர் நாராயணசாமி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
பின்னர் ரூ.7 லட்சம் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட கருமாதி கொட்டகையை  பார்வையிட்டபின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீராதாரங்களை பாதுகாக்க எங்கள் அரசு திட்டமிட்டு, 6 ஏரிகளை தூர்வாரி வருகிறது. இதற்காக ஏரி சங்கங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

64 ஏரி, குளங்கள் சீரமைப்பு

புதுச்சேரி காரைக்காலில் உள்ள 64 ஏரி குளங்களை ஆழப்படுத்தி, செப்பனிட்டு வருகிறோம். இதற்காக ரூ.6 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேறியவுடன் மழை  நீரும், வெள்ளத்தால்  வெளியேறும் நீரும் சேமிக்கப்படும். 64 ஏரி, குளங்களும் புனரமைக்கப்பட்டால் நீர் பஞ்சம் ஏற்படாது.

உள்ளாட்சித் தேர்தல்

புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை உள்ளாட்சி அமைப்புகளில் அமுல்படுத்த வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் தெரியும். தீர்ப்பு வந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.

காரைக்கால் திருநள்ளாறிலும், தமிழகம் புதுக்கோட்டையிலும் நிலத்தில் இருந்து எரிவாயு நிலத்தில் எடுப்பதற்கு தனியார் நிறுவனத்திற்கு  சம்மதம் தெரிவித்து மத்திய நிதி அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டம்: பிரதமருக்கு கடிதம்

மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசு எந்த திட்டத்தையும் அமுல்படுத்த முடியாது. புதுச்சேரி மக்களையும், விவசாயிகளையும் பாதிக்கச் செய்யும் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு புதுச்சேரி அரசு அனுமதி தராது. மேலும் மாநில அரசின் சுற்றுச்சூழல் துறையின் அனுமதியும் தேவை. இது குறித்து பிரதமருக்கும் கடிதம் எழுதுவேன்.

இத்திட்டம் நல்ல திட்டம் அனுமதி தரவேண்டும் என்று பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளதை அரசியல் ரீதியாக ஏற்க முடியாது. மேலும் இது தமிழகத்தில் ஏற்கனவே பலவீனமாக உள்ள அக்கட்சியை மேலும் பலவீனமாக்கும் என்றார் நாராயணசாமி.

வருவாய் அமைச்சர் எப்.ஷாஜஹான், உழவர்கரை நகராட்சி ஆணையர் எஸ்.ரமேஷ் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.