நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மழையும் இல்லை பணமும் இல்லை:  வியாபாரிகள், விவசாயிகள் கவலை

வடகிழக்கு பருவ மழை, தென்கிழக்கு பருவ மழை பொய்தத்தாலும், பண பரிவர்த்தனை குறைந்ததாலும்

News image
Updated On :13 ஜனவரி 2017, 11:20 am

ஜி.சுந்தரராஜன்

வடகிழக்கு பருவ மழை, தென்கிழக்கு பருவ மழை பொய்தத்தாலும், பண பரிவர்த்தனை குறைந்ததாலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் வியாபாரம் பாதித்ததால், வியாபாரிகள் பெருத்த கவலைக்குள்ளாகியுள்ளனர்.

வேதனையில் விவசாயிகள்: இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மனை, தென்கிழக்கு பருவ மழை பொய்ததாலும், கர்நாடகஅரசு தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை தராதாலும் தமிழகத்தில் குறிப்பாக காவிரி டெல்டா கடை மடை பகுதியான கடலூர் மாவட்டத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள வீராணம்ஏரி, பெருமாள் ஏரி உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் வறண்ட நிலையில் காட்சியளிக்கிறது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பயிரிட்ட நெல், கரும்பு, வாழை, மணிலா உள்ளிட்ட பயிர்கள் நீரின்றி கருகியதால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் விவசாயிகள் பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பணப்புழக்கம் குறைவு: மேலும் ரூ 500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினால், பணம் இல்லா பரிவர்த்தனையினால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வங்கியில் பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். நோட்டுகள் செல்லாது என அறிவித்து 50 நாட்களை கடந்த பிறகும் ஏடிஎம் மையங்களில் மக்கள் நீண்ட கியூ வரிசையில் நின்று பணம் எடுக்கும் நிலையில் உள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வங்கிகளுக்கு போதிய பணம் வந்து சேராததால், கணக்கில் பணம் வைத்துள்ளவர்கள்கூட பணம் எடுக்க முடியாமல் அவதியுற்றுள்ளனர்.

வர்த்தகம் பாதிப்பு: சிதம்பரம் நகரின் வர்த்தகத்தின் ஆதாரமாக திகழும் அண்ணாமலைப் பல்கலையில் கடும் நிதிநெருக்கடி ஏற்பட்டு கடந்த டிசம்பர் மாதம் ஊதியம் வழங்கப்படாததால், ஆசிரியர்கள், ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் விளைவாக தமிழகஅரசு பேச்சுவார்த்தை நடத்தி தற்போது ஜன.12-ம் தேதி பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால் ஊதியத்தொகை எடுக்க முடியாமல் ஆசிரியர்களும், ஊழியர்களும் அவதியுற்றுள்ளனர். பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.54 கோடி ஊதியம் வழங்கப்படுகிறது.

மேற்கண்ட பிரச்சனைகளால் பொங்கல் பண்டிகை வியாபாரம் சிதம்பரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிதம்பரம் நகரில் வர்த்தக பகுதியான மேலரதவீதியில் பொருள்கள் வாங்க குறைவான கூட்டமே இருந்தது. கரும்பு ஜோடி ரூ.40 முதல் 60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வாங்குபவர்கள் குறைவாக இருப்பதால், குறைந்த விலைக்கு கரும்பு விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் கவலைக்குள்ளாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.