ஜெய்ப்பூர்: உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு, ரொக்கமற்ற பொருளாதாரம் ஆகிய இரு பிரிவுகளையும் பன்னிரெண்டாம் வகுப்பில் கற்பிக்கப்படும் பொருளாதார பாடத் திட்டத்தில் சேர்க்க ராஜஸ்தான் மாநில இடைநிலை பள்ளிக் கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த வாரியத்தின் செயலர் மேக்னா சௌதரி, பிடிஐ செய்தியாளரிடம் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்துவரும் வேளையில், அதுதொடர்பான பாடப் பிரிவை பன்னிரெண்டாம் வகுப்பில் கற்பிக்கப்படும் பொருளாதார பாட புத்தகத்தில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்குத் தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வரும் கல்வி ஆண்டிலிருந்து இந்தப் புதிய பாடத் திட்டம் அமலுக்கு வரும் என்றார் மேக்னா சௌதரி.
பாஜக ஆளும் ராஜஸ்தானில் ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனை என்ற இலக்கை அடைய பல்வேறு நடவடிக்கைகளை அந்த மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
நாட்டிலேயே ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனையை அதிகம் மேற்கொள்ளும் முதல் 5 மாவட்டங்களில் ராஜஸ்தானில் உள்ள அஜ்மரும் ஒன்று.
ஜெய்ப்பூரில் பயணச்சீட்டை ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனை மூலம் மெட்ரோ ரயில் நிர்வாகம் அளித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு... பிரதமர் மோடி முக்கிய வேண்டுகோள்!

சிஎஸ்கே பேட்டிங்: சர்ஃபராஸ் கானுக்குப் பதிலாக உர்வில் படேல்!

மே 1 முதல் சென்னையில் வெயில் சுட்டெரிக்கும்! தமிழ்நாடு வெதர்மேன்

தஞ்சை பெரிய கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

